பள்ளி மாணவர்கள் மூலம் சாதி ஒழிப்பு சாத்தியமா?

சாதி மத அடையாளங்களை துறந்து 1.24 லட்சம் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று கேரளா கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. "பள்ளி மாணவர்களின் இந்த செயல் சாதி ஒழிப்புக்கு வித்திடுமா? அனைத்து மாநிலங்களிலும் இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

"அவர்கள் கேட்பார்கள் பதில் எமது விருப்பம் இல்லை என்றால் சாதி போடத் தேவை இல்லை," என்று பதிவிட்டுள்ளார் ஜெத்ரோ பகீரதன் கந்தசாமி எனும் நேயர்.

"அந்த அளவுக்கு இன்னும் மக்கள் அறிவு வளர்ச்சி அடையவில்லை ," என்கிறார் சக்தி வைஷ்ணவி எனும் ஃபேஸ்புக் நேயர்.

புலிவலம் பாஷா எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார், "சாதி மதம் என்று ஒன்று இல்லாமல் போனால் அரசியல் என்று ஒன்று அகராதியில் இல்லாமல் போகும்,அரசியல் செய்பவர்களுக்கு இந்த இரண்டும் உயிர் நாடி!!!!"

"வித்திடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த செய்தியை படிக்கும் போதே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.தமிழகத்திலும் இதுபோல் புரட்சி நடக்க வேண்டும். நம் வருங்கால சந்ததியாவது ஜாதி என்னும் இழிவை விட்டு ஒழிக்கட்டும்," என சந்தோஷ் எனும் நேயர் ட்விட்டரில் பதிந்துள்ளார்.

"அருமையான விஷயம்! இது சரி வருமானு ஆராய்ச்சி செய்து முடிவெடுப்பதுக்கு பதிலா..செயலில் பழக்கபடுத்தி விட்டால்..கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த தலைமுறையிடம் சின்ன மாற்றம் வந்தாலும்.இந்த முயற்சி வெற்றிதானே," என்கிறார் சாந்த குமார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்