காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை தடுக்கிறதா கர்நாடக தேர்தல்?

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் காவிரி தொடர்பாக முடிவு எடுத்தால் உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசு காரணம் கூறியுள்ளது.

"கர்நாடகா தேர்தலை மனதில் கொண்டு வாக்கு வங்கி அரசியல் செய்கிறதா மத்திய அரசு? மத்திய அரசு சொல்வதில் உண்மை இருக்கிறதா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் தேர்தலை எதிர்பார்க்கமாட்டார்கள். இது சுயநலம் பிடித்த அரசு," என்பது முரளி தேவி எனும் நேயரின் கருத்து.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"தமிழகத்தில் உணர்ச்சிப்பூர்வ பிரச்சனை எழாதா? இல்லை எழுந்தால் ஜூனியர் பாஜாக (அஇஅதிமுக) அரசால் கட்டுப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையா," என்று கேள்வி எழுப்புகிறார் தமிழன் எனும் பெயரில் ட்விட்டரில் பதிவிடும் நேயர்.

"நடுவண் அரசு கலவரத்துக்கு அஞ்சுகிறதா...கலவரத்தைத் தூண்டுகிறதா..? ராணுவத்தைக் கையில் வைத்துக்கொண்டு ....தீர்ப்பை ஏற்றுக்கொண்டு .. சட்டம் ஒழுங்கைக் காக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே," என்கிறார் ரங்கசாமி குமரன் எனும் நேயர்.

ராஜவேல் ராஜா இவ்வாறு கூறுகிறார், "இதற்கு பதிலாக ,இந்தியா வாழ தகுதி இல்லாத நாடு என்று மத்திய அரசு அறிவிக்கலாம்."

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

மைய அரசு துரோகம் செய்கிறது என்கிறார் குமரேசன் எனும் நேயர்.

"தமக்கு எதிரான அநியாயங்களை கூட எதிர்க்கும் நெஞ்சுரமற்ற தமிழக மக்களும், அரசியல் தலைமைகளும் தமது உரிமைகளுக்காக போராட துணியமாட்டார்கள் என்பதை மத்திய அரசும் அதன் உளவு நிறுவனங்களும் நன்கு அறியும். தமிழ்நாடு இந்தியாவின் காலனி(ணி)" என்று ட்விட்டரில் கூறியுள்ளார் முரளி.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

"அதான் ஒன்றரை மாதத்திற்கு முன்னரே தீர்ப்பு வந்ததே. இப்போது தானே தேர்தல் அறிவிக்கிறாங்க," என்கிறார் ரமேஷ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: