#வாதம்விவாதம்: கல்வி நிறுவனங்களின் லாபவெறிக்கு இறையாகும் மாணவர்கள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

#வாதம்விவாதம்

பட மூலாதாரம், Getty Images

'கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்துவது வரவேற்கத்தக்கதா?விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் வைப்பது குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துமா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"பெற்றோர் தங்களது ஆசையைப் பிள்ளைகள் மீது திணிப்பதற்கும், கல்வி நிலையங்கள் தங்களது வணிகத்தைப் பெருக்குவதற்கும் மாணாக்கரின் சுய விருப்பத்திற்கு எதிராகக் கோடை விடுமுறை நாட்கள் பயன்படுத்தப்படுகிறது. போட்டிகள் மிகுந்த இவ்வுலகில் அறிவுப்பூர்வமான சிந்தனைகளை வளர்ப்பதாக வணிக படுத்தி தாழ்வு மனப்பான்மையையும், தோல்விகளைத் தாங்காத மனப்பாங்கையும்தான் கோடைக்கால சிறப்பு வகுப்புகள் மாணாக்கர் இடையே வளர்கின்றனர்," என்கிறார் சக்தி சரவணன்.

செண்பகம் பகு எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர், "சிபிஎஸ்சி வினாத்தாள் வெளியானதால் ஒரு பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு என்று அறிவித்த உடன் மாணவர்கள் திரும்பவும் அதே பாடத்தை படிக்கிறது மன உளைச்சல் என்று கூறுகிறார்கள்.,அப்படியெனில் நீட்டும் மறுபடிப்பு தானே," என்று கேள்வி எழுப்புகிறார்.

"கோடை விடுமுறையில் வகுப்பு வைப்பது தவறான ஒன்று.ஆனால் இதில் இருக்கும் மீறலை எந்த ஒரு பெற்றோரும் எதிர்ப்பதில்லை. அதனால் இது நடக்கிறது. எந்த மீறலாக இருந்தாலும் தவறு என்பதை சமுகம் உணர வேண்டும்.இதில் மாணவர்கள் நலன் சார்ந்து யாரும் நடத்துவது இல்லை," என்கிறார் அருண்.

"இன்று சுகமாக இருக்கவேண்டிய கல்வி, சுமையாகி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன அழுத்தம் கொடுக்கிறது. அதிகப்பணம் சம்பாதிக்கவேண்டும்என்ற கல்வி வணிகர்களும் பெற்றோர்களும் கல்வித்துறையும் இதற்கு காரணம்," என்பது சுப்பிரமணியன் அகோரம் என்னும் நேயரின் கருத்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: