காஷ்மீரில் கலவரம்: 20 பேர் உயிரிழப்பு; 70 பேர் படுகாயம்

காஷ்மீர்

பட மூலாதாரம், Reuters

இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் அரசு படைகள் மற்றும் போராளிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட கடுமையான மோதல்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 70 பேர் படுகாயமடைந்தனர்.

கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொதுமக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு பேர் உயிரிழந்த மோசமான சம்பவம் இது என்று காஷ்மீரில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், EPA

பொதுமக்கள் மட்டுமில்லாமல், குறைந்தது மூன்று இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் போராளிகள் என்று சந்தேகிக்கப்படும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீரின் பெரும்பாலான பொதுமக்கள் சுதந்திரம் வேண்டி பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: