காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு!

காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு!

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதததை கண்டித்து அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என அதிமுக எம் பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜெயலலிதா போராடியதாகவும், ஜெயலலிதா வழங்கிய இந்த பதவியை காவிரி விவாகரத்திற்காக இழப்பதில் தனக்கு கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களிடம் இதுகுறித்து கலந்து ஆலோசித்தீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முத்துக்கருப்பன், முதல்வர் பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தனது மனதை மாற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் அலைப்பேசியை அணைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

எதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறது தெரியவில்லை என்று கூறிய அவர், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருப்பது எதற்கு அப்படி ஒரு அரசாங்கம் இருக்கவேண்டும் கலைத்துவிட்டு போகலாமே என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :