பத்திரிக்கையாளர் அங்கீகாரம் தொடர்பான உத்தரவை திரும்ப பெற பிரதமர் மோதி உத்தரவு

போலி செய்திகள் அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில், பத்திரிக்கையாளர் அங்கீகாரம் பெறுவதற்கான வழிமுறைகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வகுத்த வழிமுறைகளை பிரதமர் மோதி திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளார்.

மோதி

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலி செய்திகள் குறித்த புகார்கள் பெறப்பட்டால், அது அச்சு ஊடகமாக இருந்தால் இந்திய பத்திரிக்கையாளர்கள் கவுன்சிலுக்கும், மின்னணு ஊடகமாக இருந்தால் செய்தி ஒளிபரப்பு சங்கத்திற்கும் சோதனைக்காக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

"போலி செய்தி குறித்த சோதனை 15 நாட்களுக்குள் முடிக்கப்படும். அதுவரை சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர் அங்கீகார அட்டை தருவது நிறுத்தி வைக்கப்படும்." என்றும் கூறி இருந்தது அந்த அறிக்கை.

போலி செய்தி ஒளிபரப்பியது உறுதி செய்யப்பட்டால், முதல்முறை, 6 மாதமும், இரண்டாம் முறை ஒரு வருடத்திற்கும், மூன்றாவது முறை நிரந்தரமாகவும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எதிர்ப்பு

இதற்கு ஊடகவியலாளர்கள் தரப்பிலிருந்து வலுவான எதிர்ப்புகள் எழுந்தன.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இது தொடர்பாக ஒரு விவாத கூட்டமும் டெல்லி பத்திரிகையாளர் சங்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

போலி செய்திகளை கட்டுப்படுத்தும் முயற்சியை நான் பாராட்டுகிறேன், ஆனால் என்னுடைய புரிதலுக்கான சில கேள்விகள்: நேர்மையான நிருபர்களைத் துன்புறுத்துவதற்கு இந்த விதிகளை தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதற்கு உத்தரவாதம் என்ன? யார் போலி செய்தி என்னவென்று தீர்மானிப்பவர்? என்றெல்லாம் கேள்வி விடுத்து இருந்தார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகமத் படேல்.

வாபஸ்

இப்படியான சூழ்நிலையில், அந்த அறிக்கையை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. இந்த விவகாரத்தை இந்தியாவின் பிரஸ் கவுன்சில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: