காளை வளர்ப்பில் சாதித்து காட்டிய பெண்ணின் வெற்றிக்கதை (காணொளி)

காளை வளர்ப்பில் சாதித்து காட்டிய பெண்ணின் வெற்றிக்கதை (காணொளி)

ஈரோடு மாவட்டம் காங்கேயம் கிராமத்தில் இனவிருத்தி காளை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார் 51 வயதான சௌந்தரம் ராமசாமி.

சமீபத்தில் கோவையில் நடத்தப்பட்ட பிபிசி ஷி (BBC SHE) நிகழ்ச்சியில் பெண்கள் எந்த வகையான செய்திகளை படிக்க விரும்புகிறார்கள் என்று கேட்டபோது, கிராமங்களில் உள்ள பெண் தொழில்முனைவோரை ஊடகங்கள் ஊக்கப்படுத்துவதில்லை, அவர்களின் கதைகளை படிக்க ஆர்வம் இருப்பதாகவும், கிராமத்தில் உள்ள பெண்ணின் கதையை பிபிசி ஷி வெளிக்கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் மாணவிகளுடன் நடத்தப்பட்ட கருத்தாய்வின்போது அவினாசிலிங்கம் கல்லூரி மாணவி மதுமிதா கருத்துத் தெரிவித்தார்.

காங்கேயத்தில் உள்ள சௌந்தரம் ராமசாமியின் வெற்றிக்கதையைக் கேட்பதற்காக, பிபிசி ஷி குழுவினர், மதுமிதாவுடன் அந்த கிராமத்திற்குச் சென்றார்கள். சௌந்தரத்தின் காளை வளர்ப்புக் கலை பற்றி விரிவாகக் கேட்டோம்.

சௌந்தரம் ராமசாமியின் காளை வளர்ப்பு குறித்து முழுமையாக படிக்க:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: