"ஐ.பி.எல் போட்டியை நிறுத்தினால் காவிரியில் தண்ணீர் வருமா?"
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
'கிரிக்கெட் போட்டிகளை எதிர்ப்பதால், எதிர்பார்க்கும் பலன் தமிழகத்துக்குக் கிடைக்குமா? ஒரு பிரச்சனையை அணுகுவதற்கு இது முறையான வழி இல்லையா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"போட்டிகளை எதிர்ப்பதனால் பலன் கிடைக்குமா கிடைக்காதா என்பதை தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்புக் குரலாக இது இருக்கும்," இருக்கும் என்கிறார் பாலா குமாரன் எனும் பிபிசி தமிழ் நேயர்.
"ஐபிஎல் போட்டியை எதிர்ப்பதன் மூலம் காவிரி உரிமையைப் பெற முடியாது. ஆனால் உலகின் கவனத்தை ஈர்க்கலாம்," என்பது வெங்கட் சின்னாவின் கருத்து.
"முதலில் நஷ்டத்தை ஏற்படுத்துவோம். அவர்கள் சிந்திக்கும்படி செய்வோம் தீர்வு தானாகவே வரும்," என்று ஜார்ஜ் பீட்டர் தமிழன் எனும் பெயரில் ட்விட்டரில் பதிவிடும் நேயர் கூறியுள்ளார்.
"இங்கு எதிர்ப்பு இல்லாமல் போயிருந்தால் போராட்டம் திசை மாறி ஐபிஎல் கொண்டாட்டம் ஆகியிருக்கும்," என்கிறார் விஜேந்திரன் தங்கராஜ் எனும் நேயர்.
சந்தோஷ் குமார் இவ்வாறு கூறுகிறார்,"பலன் கிடைக்கிறதோ இல்லையோ பந்த் நடத்துவதற்கு இது எவ்வளவோ தேவலை. பந்த்தினால் சராசாி மனிதா்கள் பாதிப்படைகிறார்கள்."
"முறையான வழியில் தண்ணீர் கிடைக்காமல் இருக்கும்போது, தனது கண்டனத்தை ஒரே வழியில் தெரியப்படுத்த முடியவில்லை. ஒரு மாற்று முயற்சி தேவைப்படுகிறது," என்கிறார் வீர சிவா எனும் ட்விட்டர் பதிவர்.
ஐ.பி.எல், போராட்டச் சூழலை நீர்த்து போகச்செய்துவிடும் என்கிறார் அருள்ராஜ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்