காவிரி விவகாரம்: தமிழகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் மணலில் புதைந்தும், நெற்றியில் நாமம் இட்டும், பிணம் போல கழுத்தில் மாலை அணிந்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயி அய்யாக்கண்ணு கூறுகையில், "கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் காவிரி நீருக்காக போராடி வருகிறது. ஆனால், தமிழகத்திற்கு நீதி மறுக்கப்பட்டே வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டிய மாநில அரசு, அதை செய்யாமல் விவசாயிகளுக்காக போராடும் எங்களால் சட்டம் ஒழுங்கு கெடுகிறது" என்று கூறுவதாக தெரிவித்தார்.
"மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படாமல், காவிரி மேலாண்மை வாரியத்தை காலம் கடத்தாமல் அமைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்" என்றும் அவர் கூறினார்.
தில்லியிலும் போராடும் இளைஞர்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தலைநகர் தில்லியிலும் தமிழ் இளைஞர்கள் அமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்துள்ளனர். விவசாயிகள் பிரச்சனையை அறிந்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசு பெயருக்காக உண்ணாவிரதம் இருப்பதாக குறிப்பிட்ட அவர்கள், மாநில அரசு மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தை கொடுக்கவில்லை என்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்