"காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்" - ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்

சதீஷ்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்றுள்ள இந்தியாவை சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கத்துக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் குமாருக்கு தமது வாழ்த்தை தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அவருக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாக தங்கம் வென்று நாட்டிற்கும், நம் மாநிலத்துக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல் சதீஷுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் சதீஷ் குமார் பெருமை சேர்த்துள்ளதாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சதீஷுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், காயம் இருந்தும் நாட்டிற்காக தங்கம் வென்றுள்ளது அவர் தைரியத்தை பிரதிபலிக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

மிகத்திறமையாக சதீஷ் விளையாடி உள்ளதாக கிரிக்கெட் வீரர் வி வி எஸ் லக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, கிரிக்கெட் பிரபலங்களான சேவாக், சுரேஷ் ரைனா உள்ளிட்ட பலரும் தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: