"ஆக்கப்பூர்வ விவாதங்களை அனுமதித்திருந்தால் நாடாளுமன்றம் முடங்கியிருக்காது"

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 250 மணி நேரம் அலுவல்கள் எதுவும் நடக்காமல் வீணாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

"தங்கள் கோரிக்கையை வலியுறுத்த நாடாளுமன்ற அலுவல்களை முடக்குவது முறையான அணுகுமுறையா? அல்லது தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு வழிகளைப் பின்பற்ற வேண்டுமா?" என்று #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

"மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் மத்திய அரசு, நாட்டு நலனுக்காக நல்லது செய்வேன் என்று சொல்லியே மக்களை மிகுந்த துன்பப் படுத்துகிறார்கள். ஒரு மசோதாவை கொண்டுவர அனைத்துக் கட்சியையும் கொண்டு கூட்டம் நடத்துவதுபோல், அனைத்து கட்சிகளுக்கும் உரிய இடம் கொடுத்து அவர்கள் சொல்வதை கொஞ்சமாவது கேட்க வேண்டும். இல்லாதபோது நாடாளுமன்ற முடக்குவதே சரி," என ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார் பால குமாரன் எனும் நேயர்.

"தென்னக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுக்கும் கோரிக்கைகளுக்கான ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு அனுமதித்திருந்தால் நாடாளுமன்றத்தின் அலுவல்களும் பாதித்திருக்காது மக்களின் வரிப்பணமும் வீணாகியிருக்காது," என்பது சக்தி சரவணன் எனும் நேயரின் கருத்து.

"சரித்திரம் திரும்புகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இதே பிஜேபி இதே முறையில் பல தடவை நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தைப் பற்றி கவலைப்படும் இதே வெங்கையாநாயுடு போன்ற கதாநாயகர்களே நாடாளுமன்ற முடக்கத்துக்கு காரணமாக இருந்துள்ளார்கள்," என்கிறார் தங்கம் எனும் நேயர்.

மத்திய அரசு நம் குரலுக்கு முக்கியத்துவம் தர மறுத்தால், கண்டிப்பாக முடக்குவது சரிதான் என்கிறார் ராஜேஷ் செல்வராஜ் எனும் ட்விட்டர் பதிவாளர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்