காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனை: தமிழ் திரை உலகினரின் அறவழிப் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். அதுபோல, தமிழகத்தின ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடி வருகின்றனர்.

இது குறித்து நடிகர்களும் ஆங்கொன்றும், இங்கொன்றுமாக குரல் கொடுத்து வந்துபோது, திரை உலகத்தினர் இப்பிரச்சனைகளுக்காக மெளன போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.

இன்று அப்போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சத்யராஜ்,விஷால், விக்ரம், நாசர், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் இளையராஜா பாடலாசிரியர் வைரமுத்து, சிபிராஜ் நடிகைகள் ஸ்ரீப்ரியா, தன்ஷிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: