எஞ்சின் இல்லாமல் இந்த ரயில் 15 கி.மீ பயணித்தது எப்படி?

சனிக்கிழமை இரவு, ஒடிசாவில் உள்ள தித்லாகட் நிலையத்தில் 22 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில், எஞ்சின் இல்லாமல் 15 கிலோமீட்டர் தூரம் சென்றது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

சுமார் 10 மணியளவில், தித்லாகட் ரயில் நிலையத்தில், அகமதாபாத்-பூரி எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. சம்பல்பூருக்குப் சென்றுக் கொண்டிருந்த 22 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் இருந்து எஞ்சின் மாற்றுவதற்காக பிரிக்கப்பட்டபோது, கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுமார் இரண்டு மணி நேரம் எஞ்சின் இல்லாமல் சென்று கொண்டேயிருந்தது.

ரயில், எஞ்சினை பிரிந்து செல்வதால் விபத்துகள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக அந்த பகுதியில் இருந்த ரயில்வே கிராஸிங்குகள் அனைத்தும் மூடப்பட்டன.

சுமார் 15 கி.மீ பயணித்த ரயில் 12 மணி சுமாருக்கு கசிகா ரயில் நிலையத்தில் கற்களின் உதவியுடன் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை BBC/Suresh Agrawal

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு ரயில் ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என்று கிழக்கு கடற்கரை இரயில்வேயின் தலைமை பாதுகாப்பு அதிகாரி எஸ்.எஸ். மிஸ்ரா கூறுகிறார்.

இந்த சம்பவம் எப்படி நடந்தது?

இந்த விவகாரம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்டிக் பிரேக் சரியாக வேலை செய்யாததால் இந்த தவறு ஏற்பட்டதாக சம்பல்பூர் ரயில்வே டி.ஆர்.எம். ஜெய்தேவ் குப்தா பி.பி.சியிடம் தெரிவித்தார்.

எனினும், சற்று நேரம் கழித்தே ரயில் கட்டுபாடு இல்லாமல் தானகவே நகர்வதை ரயில்வே ஊழியர்கள் கவனித்தனர்.

ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததாக ரயில்வே நிர்வாகம் கூறியது.

படத்தின் காப்புரிமை BBC/Suresh Agrawal

இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு கடற்கரை ரயில்வே ஜோதி பிரகாஷ் மிஸ்ரா பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு டி.ஆர்.எம் நேரில் சென்று பார்வையிட்டார். விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பணியில் அலட்சியமாக இருந்த இரண்டு ரயில் ஓட்டுநர்கள் உட்பட ஏழு ஊழியர்களை ரயில்வே அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: