காவிரி: ரஜினியின் ஆலோசனை பலனளிக்குமா?

  • 9 ஏப்ரல் 2018

காவிரி பிரச்சனைக்காக ஐ.பி.எல் போட்டிகளை நிறுத்த வேண்டும் அல்லது சென்னை வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

"கருப்புப் பட்டை அணிந்து விளையாடுவது காவிரி பிரச்சனையில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்க வழிவகுக்குமா? விளையாட்டில் அரசியலை புகுத்துவது சரியா?" இது குறித்து பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"ஒரு மாநிலத்தில் தொடர்ந்து அநியாயமாக உரிமைகள் மறுக்கப்படும்போது அதற்காக மக்கள் வெகுண்டெழுந்து போராடுகிறபோது பிரச்சனைகளை சரிசெய்யாமல் அதை திசைதிருப்பும் விதமாக விளையாட்டு கூத்து நடத்துவது மக்கள் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாகும்," என்கிறார் சரவணா பிரகாஷ் என்னும் நேயர்.

"அரசியல் இல்லாமல் கிரிக்கெட் கிடையாது அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் அதே போல் தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு தமிழகத்திற்காக விளையாடுபவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பது தவறில்லை அவர்களின் ஆதரவு நமக்கு மேலும் பலம் சேர்க்கும்," என்று அகிலன் எனும் நேயர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

"காவேரி பிரச்சனை அரசியல் பிரச்சனையா? இல்லவே இல்லை. அது எங்களின் வாழ்வாதாரம்," என்று ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார் ராஜேந்திரன் ராமய்யா எனும் நேயர்.

"விளையாட்டு அரசியலோடு தொடர்பு கொண்ட ஒன்றே! அதனால்தான் நாடுகளுக்கு இடையே உறவை வளர்க்க விளையாட்டை ஊக்குவித்தார்கள்," ஜெயவேல் மாணிக்கம்.

"விளையாட்டிலும் அரசியல் தான் நடக்கிறது,குறிப்பாக பணம் கொழிக்கும் விளையாட்டு என்பதால் கிரிக்கெட்டின் மோகம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது, அதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முன் சென்னையில் ஐ.பி.எல் நடத்த கூடாது என்ற போராட்டம், இங்கு நடக்கும் அநியாயத்தை உலகறிய செய்ய முடியும்," என்கிறார் பாலன் சக்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: