நாளிதழ்களில் இன்று - ஐ.பி.எல்.: மைதானத்தை மாறுவேடத்தில் கண்காணிக்க காவல்துறை முடிவு

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி - 'ஐ.பி.எல்.போட்டிக்கு எதிர்ப்பு: மாறுவேடத்தில் கண்காணிக்க காவல்துறை முடிவு'

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை காண வரும் ரசிகர்களை மாறுவேடத்தில் கண்காணிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர் என்கிறது தினமணி செய்தி.

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள அனைத்து ஐ.பி.எல். போட்டிகளையும் வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. எச்சரிக்கையை மீறி போட்டி நடத்தப்பட்டால், மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதன் விளைவாக மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளில் போலீஸார் மாறுவேடத்தில் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர் என்கிறது அந்நாளிதழ் செய்தி.

'ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து மாற்றமா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சென்னையில் தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

"இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 ஐ.பி.எல். லீக் ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால் ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு, நாளுக்கு நாள் வலுத்து வருவதால் சில ஆட்டங்களை சென்னையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது ஆலோசனையில் இறங்கியுள்ளது.

போட்டியை மாற்ற வேண்டிய சூழல் வந்தால் அதை நடத்துவதற்கு தயாராக இருக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கேரள மாநில கிரிக்கெட் சங்கத்திடம் பேசி உள்ளனர். திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் நடத்துவதற்கு நாங்கள் தயார் என்று கேரள கிரிக்கெட் சங்கம் கூறியிருக்கிறது. அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் ஐ.பி.எல். ஆட்டங்கள் திட்டமிட்டபடி சென்னையில் நடை பெறும் என்று கூறியுள்ளன." என்று விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) - 'ஏர்செல்: வைப்புத் தொகை கிடைக்குமா?'

படத்தின் காப்புரிமை Getty Images

ஏர்செல் நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ள சூழ்நிலையில், போஸ்ட்பெய்ட் தொடர்புக்காக முன்பணம் கட்டியவர்களுக்கு, அந்த வைப்புத் தொகை திரும்ப கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ். இது தொடர்பாக பேசிய சட்டவல்லுநர்கள், இதில் குழப்பம் நிலவுவதாக கூறியதாக விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'அழிக்கப்பட்ட இந்தி எழுத்துக்கள்'

படத்தின் காப்புரிமை facebook

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், சென்னை பார்க் தொடர்வண்டி நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ். நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், அந்தப் பகுதியில் ரயில் மறியலில் ஈடுப்பட்டப் பின்புதான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது என்றும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கேதும் பதியப்படவில்லை என்றும் விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

தி இந்து (தமிழ்) - 'பெருநிறுவனங்களை வளர்க்கிறது பாஜக'

படத்தின் காப்புரிமை twitter/CMOKerala

தொழிலாளர்களை வஞ்சித்து, பெருநிறுவனங்களை வளர்ப்பதிலேயே பாஜக அரசு குறியாக இருக்கிறது என்று சென்னையில் நடந்த அரசு ஊழியர் தேசிய மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார் என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி.

"அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் 16-வது தேசிய மாநாடு சென்னையில் கடந்த 5-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து, சாதி மற்றும் மதத்தின் பெயரால் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைக்கின்றனர். இதனால், உழைக்கும் வர்க்கம் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறது. இது தேசிய நலனுக்கு உகந்ததல்ல.பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றல், அந்நிய நேரடி முதலீடு, அரசுப் பணியில் காலிப்பணியிடங்களை ஒப்பந்தம், வெளிமுகமை மூலமாக நிரப்புவதால் தொழிலாளர்கள் மத்தியில் அமைதியற்ற நிலை காணப்படுகிறது. காங்கிரஸ் அரசு பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவில்லை. பாஜக அரசு பொருளாதார வளர்ச்சியை புறக்கணித்துவிட்டது.பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியன பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளன. தொழிலாளர்களை வஞ்சித்து, பெருநிறுவனங்களை முன்னேற்றுவதிலே பாஜக அரசு குறியாக இருக்கிறது. எனவே, பாஜவுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்." என்கிறது அந்த செய்தி.

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

படத்தின் காப்புரிமை தி இந்து

தினத்தந்தி - 'நிரவ் மோடிக்கு பிடிவாரண்டு'

பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில், நிரவ் மோதிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

"நிரவ் மோதியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 'சுவிப்ட்' என்னும் உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்பு அமைப்பு வழிமுறையின் கீழ் இந்த நிதிப் பரிமாற்றம், சட்டவிரோதமாக நடந்து உள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகாரின்மீது சி.பி.ஐ., விசாரணை நடத்துகிறது.இதில் நிரவ் மோதி, அவரது நெருங்கிய உறவினர் சோக்சி ஆகிய இருவர் மீதும் தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன" என்று விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்