இமாச்சல்: பள்ளிப் பேருந்து பள்ளத்தில் சரிந்ததில் 23 குழந்தைகள் உள்பட 27 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் மால்க்வால் பகுதியில் சுமார் 60 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று திங்களன்று மாலை சுமார் 4.30 மணியளவில் ஆழமான மலைப் பள்ளம் ஒன்றில் சரிந்து விழுந்ததில், 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 23 பேர் குழந்தைகள்.

படத்தின் காப்புரிமை THAKUR GIAN / BBC

அந்தப் பேருந்து சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததால் பனிமூட்டத்தில் அது தெரியாமல்போனது.

இமாச்சல் பள்ளிப் பேருந்து பள்ளத்தில் சரிந்ததில் 23 குழந்தைகள் உள்பட 27 பேர் பலி

அந்தப் பேருந்தின் ஓட்டுநரும் இந்த விபத்தில் பலியானதாக நூர்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் பட்யால் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை GURPREET CHAWLA / BBC

அந்தப் பேருந்து அப்பகுதியில் உள்ள வாசிர் ராம் சிங் பள்ளிக்கு சொந்தமானது.

காயமடைந்தவர்கள் பதான்கோட்டிலுள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்