நாளிதழ்களில் இன்று: 'இஸ்ரோவின் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் இன்னும் செயலிழக்கவில்லை'

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி - ஜிசாட் 6ஏ செயலிழக்கவில்லை

படத்தின் காப்புரிமை iSRO

கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் செயலிழக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஜிசாட் 6ஏ உடனான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு மட்டுமே இழக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினத்தந்தி - மோதி தமிழகம் வருகை

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழகம் வருகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து மோதிக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தி இந்து தமிழ் - 10% மட்டுமே இயங்கிய நாடாளுமன்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளின் மோதலால் உண்டாகும் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, பெருமபாலான நாட்கள் வீணடிக்கப்படுவது குறித்து ’தி இந்து’ தமிழ் நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

கடைசி கூட்டத்தொடரில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் 10% மட்டுமே நடந்துள்ளதாகவும், 120 மணிநேரத்துக்கு மேல் அமளியால் நேரம் வீணாகியுள்ளதாகவும் அந்தத் தலையங்கம் கூறுகிறது.

மாநிலங்கவையில் நட்சத்திரக் குறியிடப்பட்ட 419 கேள்விகளில் ஐந்து கேள்விகளை விடைகளைப் பெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - இஸ்லாமிய சிறுமி கொலை வழக்கில் சீக்கிய விசாரணை அதிகாரிகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப் படம்)

காஷ்மீரில் பகேர்வால் இஸ்லாமிய நாடோடி சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கு ஜம்முவில் உள்ள இந்து அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களால் மதச்சாயம் பூசப்பட்டு வருவதால், சீக்கிய அதிகாரிகள் இருவரை அந்த வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று அம்மாநிலக் காவல்துறை கோரியுள்ளது.

இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை தலைவர், அம்மாநிலத்தின் உள்துறை முதன்மைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: