கர்நாடக தேர்தல்: பெங்களூருவில் மக்களின் கருத்தறியும் பிபிசி நியூஸ் பாப் அப் அணி

கர்நாடக சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி, தேர்தல் ஜூரம் அந்த மாநிலத்தை ஆட்கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நேரத்தில் கர்நாடக மாநிலத்தை தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சி, அதனுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற உரையாடல்கள் தோசை மற்றும் காஃபி கடைகளை ஆக்கிரமித்துள்ளன.

கர்நாடகாவில் மே மாதம் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பிபிசி வெளியிட வேண்டியதாக மக்கள் கருதுகின்ற செய்திகளை பற்றி உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்பதற்காக பிபிசி நியூஸ் பாப் அப் அணி பெங்களூருவை சென்றடைந்துள்ளது.

பொதுவாக, தேர்தல் செய்திகளை வெளியிடும்போது, ஊடகங்கள் பத்திரிகை கொள்கைகளை வைத்து, வெளியிட வேண்டிய செய்திகளை முடிவு செய்கின்றன.

ஆனால், பிபிசியின் வாசகர்கள் தங்களுடைய பிரச்சனைகளை வெளியிட வாசகர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது.

இந்த முறை கர்நாடக இளைஞர்களிடம் இருந்து பிரச்சனைகளை கேட்டு பதிவு செய்யப்படுகிறது.

பெங்களூரு ஜொலிக்கின்ற மற்றும் வளருகின்ற சிலிக்கான் பள்ளதாக்காக இந்தியாவில் திகழ்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், பொது மக்களின் பிரச்சனைகளான தண்ணீர் பற்றாக்குறை, குப்பைகள், போக்குவரத்து, மாசுபாடு மற்றும் மோசமான சாலைகள் போன்றவையே செய்திகளாக பெரும்பாலும் வலம் வருகின்றன.

110 லட்சம் மக்களின் தாயகமாக விளங்கி, அடைய முடியாத இலக்கிற்கு அதிகமாகவே விரிவாகும் இந்த நகரம், அதிகரிக்கும் கஷ்டங்களை தன்னுடைய தோள்களில் தாங்குகிறது.

மேலும், அடையாள அரசியல், அருகிலுள்ள தமிழ் நாட்டோடு நீர் பங்கீடு பிரச்சனை, சட்டம் மற்றும் ஒழுங்கு, ஊழல், விவசாய நெருக்கடி போன்ற பெரிய பிரச்சனைகள் இந்த மாநிலத்தின் தேர்தலை சூழலை ஆக்கிரமித்துள்ளன.

இந்த மாநிலத்தில் உள்ள மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்க பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயல்கின்றன.

படத்தின் காப்புரிமை GOPICHAND TANDLE

எனவே, கர்நாடகாவிலுள்ள இளைஞர்களின் மனதில் என்ன உள்ளது?

இந்திரா நகரிலுள்ள ஹம்மிங்கால்ட்ரீ பார்ரில் ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 6 முதல் 8 மணி வரை டவுன்காலில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று, செய்திகள் பற்றிய உங்களின் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிபிசி நியூஸ் அணியினரால் எங்களுடைய இணையதளத்தில் உங்களுடைய செய்திகள் பற்றிய கருத்தை இடம்பெற செய்யும் உங்களின் வாய்ப்பு இது.

#BBCNewsPopUp and #KarnatakaElections2018 ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்கள் வழியாக எங்களோடு தொடர்பில் இருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: