திருச்சி: காவிரியில் ஏர் உழும் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து மக்கள் நீதி மய்யமும் வீர விளையாட்டு மீட்புக் கழகமும் இணைந்து திருச்சி காவிரி ஆற்றில் மாடுகளைக் கொண்டு ஏர் உழும் போராட்டம் நடத்தின.

திருச்சி-ஸ்ரீரங்கம் இடையே காவிரி இப்போராட்டம் நடந்தது. காவிரி ஆறு வறண்ட பூமியாக மாறிவிட்டதை தெரிவிக்கும் வண்ணம் இப் போராட்டம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் இளைஞர்கள்,மாணவர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அறவழிப் போராட்ட நடத்து உள்ளோம் என ஜல்லிக்கட்டு ராஜேஷ் எச்சரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது போலீசார் கைது செய்தனர் செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: