உனாவ் பாலியல் வன்கொடுமை - பா.ஜ.க எம்.எல்.ஏ கைது

படத்தின் காப்புரிமை Twitter

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்னோவில் உள்ள சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்.கே. கார் பிபிசியிடம் தெரிவித்தார்.

முன்னதாக குல்தீப் சிங், சிபிஐயால் 16 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

இந்நிலையில், உடனடியாக அவரை கைது செய்யும்படி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குல்தீப் சிங் செங்கார் மீது இளம் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டி இருந்தார். அதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரை வாபஸ் பெறும்படி குல்தீப் சிங் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அப்பெண்னின் குடும்பம் குற்றஞ்சாட்டி இருந்தது.

அந்தப் பெண்ணின் புகார் நிலுவையில் இருக்கும் போதே, கடந்த ஏப்ரல் மாதம் அவரது தந்தையை வேறொரு வழக்கில் காவல்துறை கைது செய்தது. காவலில் இருக்கும் போதே அவர் உயிரிழந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்