கத்துவா வழக்கு: சமூக ஊடகங்களில் இந்தியர்கள் என்ன விவாதிக்கிறார்கள்?

கத்துவாவில் சிறுமி கொலை செய்யப்பட்ட இடம்.
Image caption கத்துவாவில் சிறுமி கொலை செய்யப்பட்ட இடம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எட்டு வயதுப் பெண் குழந்தை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதிலும் கடும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக எட்டு இந்துக்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்து வலதுசாரிக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தது மக்களிடேயே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

எதையும் விவாதிக்கும் களமாக இருக்கும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை மக்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு பக்கம் குற்றவாளிகளை திட்டித் தீர்த்தும், மறுபக்கம் இந்த குற்றங்களுக்கெல்லாம் அரசாங்கம்தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அதே போன்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விவாதங்களும், மனிதாபிமானம் இறந்துவிட்டது போன்ற கருத்துகளும் சமூக ஊடகங்களில் அதிகம் காண முடிகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவர்களும், இந்த சம்பவத்திற்கு எப்படியான கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள் என்பதை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

தமிழ்நாடு

சம்பவம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள அர்வின், ஒவ்வொரு முறை இத்தகைய கொடூரமான வன்புணர்வும் கொலையும் நிகழும் போதெல்லாம் மரண தண்டனைக்கான ஆதரவுக்குரல் ஓங்கி ஒலிப்பதும், ஆறு நாட்களில் அடங்கிப் போவதும் வழக்கமாகி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விட பெரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள மாதவராஜ், பிரதமர் மோதியும் இதில் குற்றவாளிதான் எனக் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

தெலுங்கு மாநிலங்கள்

1972 மதுரா, 2007 வாக்காபள்ளி ஆகிய இடங்களில் நடந்த பல சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது 2018ஆம் ஆண்டு கத்துவாவில் இந்த கொடுமை நடந்துள்ளது. ஆதிவாசி சமூகங்கள் இவ்வாறு தொடர்ந்து தாக்கப்படுவதாக ஜஹா ஆரா கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை facebook

உங்கள் குழந்தைகளை எப்படி காப்பாற்றப் போகிறீர்கள் பெற்றோர்களே என்று கேள்வி எழுப்பி, தங்களது இயலாமையை மன்னித்துவிடும்படி கவிதை எழுதியுள்ளார் வெங்கடேஷ்.

படத்தின் காப்புரிமை facebook

பஞ்சாப்

"நான் ஒரு இந்துஸ்தானி. 8 வயது சிறுமிக்கு இவ்வளவு கொடுமை நேர்ந்துள்ளது. நான் வெட்கப்படுகிறேன்" என்கிறா குல் பனாக்

மகாராஷ்டிரா

கத்துவா சம்பவம் நடைபெற்றதையடுத்து இந்து மதம் மற்றும் இந்துக் கடவுள்களை அவதூறு பேசுகிறார்கள். ஆனால் இந்து மதம் வன்புணர்வை ஊக்குவிப்பதில்லை என்று கூறியுள்ளார் விக்யா.

கத்துவா மற்றும் உனாவ் சம்பவங்கள் மனிதாபிமானத்திற்கு எதிரானவை. குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் அம்மாநிலத்தை சேர்ந்த தேவ்.

வ்ருஷாலி யாதவ் என்பவர், "கத்துவா மற்றும் உனாவ் வழக்குகளில், முக்கியமானதை விட்டுவிட்டு ஜாதி, மதம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்கிறார்.

குஜராத்

நம் அரசியலமைப்பு சட்டத்தின் ஆசான் அம்பேத்கர். ஆனால், கத்துவா மற்றும் உனாவ் வன்புணர்வு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தால்தான் அவருக்கு உண்மையான அஞ்சலி என்று கூறியுள்ளார் வினய் பிரஜ்பதி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: