வி.எச்.பி.யில் இருந்து பிரவீன் தொகாடியா விலகல்; காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவிப்பு

பிரவீன் தொகாடியா படத்தின் காப்புரிமை Kalpit Bhachech
Image caption பிரவீன் தொகாடியா

சில ஆண்டுகள் முன்புவரை தீவிர இந்துத்துவவாதியாக அறியப்பட்டவரும், விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் சர்வதேச செயல் தலைவராக இருந்தவருமான பிரவீன் தொகாடியா தாம் 30 ஆண்டுகளாக இருந்த வி.எச்.பி. அமைப்பில் இருந்து சனிக்கிழமை விலகினார்.

செவ்வாய்க்கிழமை முதல் தாம் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

வி.எச்.பி.யின் சர்வதேச சர்வதேசத் தலைவர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடந்தது. அதில் அவர் முன்மொழிந்த வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அமைப்பில் இருந்து விலகும் முடிவை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் தொகாடியா.

முன்னாள் இமாச்சலப் பிரதேச ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே சர்வதேசத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொகாடியா ஆதரவளித்த ராகவ ரெட்டி தோற்கடிக்கப்பட்டார்.

"கடந்த 32 ஆண்டுகளாக நான் வி.எச்.பி.யில் இருந்தேன். இனி நான் அந்த அமைப்பில் இல்லை. ஆனால், இந்துக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். செவ்வாய்க்கிழமை முதல் இந்துக்களின் நீண்டநாள் கோரக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அகமதாபாத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்," என்று குறிப்பிட்டார் தொகாடியா.

குஜராத் மாநிலத்தில், மோடியின் நண்பராக இருந்த தொகாடியா, திடீரென சில மாதங்கள் முன்பு தம்மைக் கொலை செய்யச் சதி நடப்பதாக அறிவித்தார். அது முதல் பாஜக தலைமைக்கும் அவருக்கும் கசப்பு நிலவி வந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்