கத்துவா சம்பவம்: பாதிக்கப்பட்ட பகர்வால் சமூகத்தினர் யார்?

  • 16 ஏப்ரல் 2018

கத்துவா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கு சூடான பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சமவெளிகளில் வாழ்ந்து வருகின்ற பகர்வால் சமூகத்தினர் பாதுகாப்பாக உணரவில்லை.

பதற்றமான நிலைமையாலும் தட்பவெப்பம் அதிகரித்திருப்பதாலும், ஜம்முவை விட்டு புறப்பட்டு குளிரான பகுதிகளுக்கு இந்த ஆண்டு சற்று முன்னதாகவே செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மழை அளவு மிகவும் குறைவாக இருப்பதால், தங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் தீவனம் வழங்குவதற்கு கடினமாக உணர்வதால் இவர்கள் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது.

கத்துவாவின் ரசானா கிராமத்திலுள்ள தங்களின் வீட்டை பூட்டிவிட்டு குற்றமறியாத 8 வயது குழந்தையின் குடும்பமும், அவர்களின் கால்நடையோடு அடுத்த முகாமிடத்திற்கு சென்றுள்ளனர்.

பகார்வால் சமூகத்தின் குழந்தை

இந்த குடும்பத்தோடு நூற்றுக்கணக்கான குஜ்ஜார், பகர்வால் குடும்பங்களும் ஜம்முவிலுள்ள சமவெளிகளை விட்டு, காஷ்மீர் மற்றும் பிற மலைபாங்கான பகுதிகளை நோக்கி புறப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதிகளில் கோடைகாலத்தை கழித்துவிட்டு, நவம்பர் மாதத்தில்தான் அவர்கள் இந்த இடத்திற்கு திரும்பி வருவார்கள்.

இந்த மலைப்பாங்கான பகுதிகளில் பனிபொழிவு தொடங்குகின்ற வேளையில், அவர்கள் இந்த முகாமிடத்தையும் மாற்றிவிடுகின்றனர்.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், தங்களின் கால்நடைகளோடு செல்லுகின்ற இந்த மக்களை நாம் பார்க்கலாம்.

சிலர் இந்தப் பிரதான சாலைகளில் செல்வதற்கு பதிலாக, மலை பாதைகளின் வழியாக நேராக சிலர் செல்கின்றனர்.

தங்குவதற்கு எங்காவது இடம் கிடைத்துவிட்டால் போதும், அந்த மக்கள் அங்கு சற்று இளைப்பாறுகின்றனர்.

கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்து, சிறிது காலம் இளைப்பாறிய பின்னர், அவர்கள் அடுத்த முகாமிடத்திற்கு செல்கின்றனர்.

இதே மாதிரி இவர்களின் வாழ்க்கை சுழற்சி தொடர்கிறது. ஒருபோதும் நின்றுவிடுவதில்லை.

மேய்ப்பர்களான பகார்வால் மக்கள்

பொதுவாக, குஜ்ஜார் சமூகத்தின் பெரியதொரு, முரட்டு குணமுடைய பிரிவினர் "பகர்வால்" என்று அழைக்கப்படுகின்றனர்.

காஷ்மீரி மொழி பேசுகின்ற அறிஞர்களால் இவர்களுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

வேறு சொற்களில் சொல்வதாக இருந்தால், குஜ்ஜார் சமூகத்தின் இன்னொரு பெயர் பகர்வால் என்பதாகும்.

பகர்வால் சமூகத்தை சேர்ந்த மக்களில் பலரும் மேய்ப்பர்களாக உள்ளனர்.

பல தலைவர்கள் தங்களை பகர்வால் சமூகத்தினர் என்று அழைப்பதைவிட குஜ்ஜார் தலைவர்கள் என்று அழைப்பதையே விரும்புகின்றனர்.

கல்வி அறிவு

சிலர் கொஞ்சம் கல்வியறிவு பெற்றுள்ளனர். இத்தகையோர் தங்கள் சமூகத்தை சேர்ந்த பிற மக்களும் உலகை பற்றி அறிந்து கொள்வதற்காக கல்வியறிவு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழிந்துவிட்டாலும், இந்த நீல வானத்தின் கீழுள்ள புல்வெளிகளிலும், மலைபாங்கான பகுதிகளிலும் தங்களின் கால்நடைகளோடு இந்த நாடோடி மக்கள் தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

மூன்று பிரிவினர்

படத்தின் காப்புரிமை PRESS TRUST OF INDIA

குஜ்ஜார் மற்றும் பகார்வால் மக்களின் வாழ்க்கை பற்றி ஆய்வு நடத்திய ஜாவித் ராஹி, பிபிசியிடம் கருத்து தெரிவிக்கையில், குஜ்ஜார் மற்றும் பாகார்வால் மக்களை மூன்றாக பிரிக்கலாம் என்று தெரிவித்தார்.

பழங்குடியினர் ஆய்வு மற்றும் கலாசார பவுண்டேசனை சேர்ந்த ஜாவித் ராஹி கூறியபடி, முதலாவதாக, சில குஜ்ஜார் மற்றும் பகார்வால் மக்கள் அனைவரும் நாடோடிகள். அவர்கள் காடுகளில் தங்கி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு என்று வேறு இடங்கள் கிடையாது.

இரண்டாவது பிரிவினர், பாதி நாடோடிகளாக வாழ்பவர்கள். இந்த மக்களுக்கு வாழ்வதற்கு ஓரிடம் உள்ளது. அருகிலுள்ள காடுகளுக்கு சென்று அங்கு சற்று காலம் வாழ்ந்த பின்னர் தங்களுடைய இடத்திற்கு திரும்பி வந்து இந்த மக்கள் தங்குகின்றனர் என்று ஜாவித் ராஹி கூறுகிறார்.

மூன்றாவது பிரிவினர் இடம்பெயரும் நாடோடிகள். இவர்கள் தங்கி வாழ்வதற்கு மலைகளிலும், சமவெளிகளிலும் இடங்கள் உள்ளன.

பகார்வால் மக்களின் தனித்துவம்

இந்தியாவின் 12 மாநிலங்களில் குஜ்ஜார் மற்றும் பகார்வால் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு அப்பால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள்.

நீண்ட காலத்திற்கு பிறகும், இவர்களின் மொழி, ஆடை, உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை பாணிகள்தான் இந்த மக்களின் அடையாளங்களாக இருந்து வருகின்றன என்கிறார் ஜாவித் ராஹி. இதுவரை எந்த மாற்றமும் இல்லை.

மிக விரைவாக மாற்றம் அடைந்து வருகின்ற உலகோடு நேரடி தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே இந்த மக்களின் அடையாளங்கள் மாறமல் இருப்பதற்கு காரணமாகும்.

நீண்ட போரட்டத்திற்கு பிறகு 1991ம் ஆண்டு பகாவால் சமூகத்தினர் பழங்குடியின தகுநிலையை பெற்றதாக ஜாவித் ராஹி சுட்டிக்காட்டுகிறார்.

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு படி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் வாழுகின்ற குஜ்ஜார் மற்றும் பகார்வால் சமூகத்தினரின் மொத்த எண்ணிக்கை 12 லட்சமாகும், அதாவது மொத்த மக்கள்தொகையில் 11 சதவீதம்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு படி, 9.80 லட்சம் குஜ்ஜார் மற்றும் 2.17 லட்சம் பாகாவார் சமூகத்தினர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் வசிக்கின்றனர் என்று ஜாவித் ராஹி குறிப்பிடுகிறார்.

இந்த மக்களின் எண்ணிக்கை கூட துல்லியமானதல்ல. சமவெளி பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றபோது. பெரிய எண்ணிக்கையிலான பகார்வார் மக்கள் மலைகளில் இருப்பதாலும், சிலர் நாடோடிகளாக இருப்பதாலும் சரியாக கண்கெடுப்பது மிகவும் கடினம் என்கிறார் ஜாவித் ராஹி.

அவருடைய மதிப்பீட்டின்படி, இத்தகைய பாகாவார்/குஜ்ஜார் மக்களின் எண்ணிக்கை 5 முதல் 6 லட்சத்திற்குள் இருக்கலாம் என்பதாகும்.

பகார்வால் மக்களின் பொருளாதார நிலைமை

படத்தின் காப்புரிமை Getty Images

தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை விற்கின்ற பகார்வால் மக்கள் பொதுவாக செம்மறி ஆடுகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் நாய்களை வளர்ப்பதை தங்களுடைய தொழிலாக செய்து வருகின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தேவைப்படும் இறைச்சி ராஜஸ்தான் வழியாக கொள்முதல் செய்யப்படும் விலங்குகள் மூலம் கிடைக்கிறது.

குறிப்பாக, ஈத் பண்டிகை மற்றும் பிற விழாக்களின்போது பாரம்பரிய வழக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் இறைச்சி தேவையை குஜ்ஜார்/பகார்வால் சமூகத்தினர் நிறைவு செய்கின்றனர்.

ஜாவித் ராஹியின் கூற்றுப்படி பகார்வால் சமூகத்தை சேர்ந்தோர் பொருட்களை வாங்க இன்னும் பண்டமாற்று முறையைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மக்களுக்கு வங்கிகளில் கணக்குகள் இல்லை. வங்கி அமைப்பிலும் இவர்களுக்கு நம்பிக்கை எதுவுமில்லை.

நீண்ட காலமாக அவர்களின் தேவைக்கேற்றப்படி உணவு பாதுகாப்பை வழங்க அவர்கள் கோரி வருகின்றனர். ஆனால், இது தொடர்பாக சிறந்த கொள்கை முடிவு எதையும் அரசு எடுக்கவில்லை என்று ஜாவித் ராஹி குறிப்பிடுகிறார்.

"இது தொடர்பாக நானும் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். ஆனால், இதில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை" என்று ஜாவித் ராஹி தெரிவித்தார்.

இந்த மக்கள் ஓரிடத்தில் குடியமர்கின்றனர்கள் அல்ல என்கிற உண்மையை அரசு இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. அரசு இவர்களுக்கு உதவ விரும்பினால், இவர்களுக்கு உதவுவோரும் அவர்களோடு செல்லும் வகையிலான படைப்பாற்றமிக்க நடமாடும் திட்டத்தை அரசு உருவாக்கி உதவ வேண்டும். இதுபோல இதுவரை எதுவும் நடைபெறவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

சமூக பாதுகாப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

பகார்வால் சமூகத்தை சோந்த மக்கள் கல்வியறில் இன்னும் பின்தங்கியே உள்ளனர்.

நடமாடும் கல்வி நிலையங்கள் பலவற்றை இவர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளது.

இந்த மக்களில் கல்வியறிவு பெற்றுள்ள சிலருக்கு இந்த நடமாடும் பள்ளிகளில் வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனாலும், இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளதா என்றால் கேள்விகுறியே.

தன்னுடைய கூட்டத்தினரோடு சான்தாவாரி முகாமிடத்திற்கு செல்கிறபோது, அரசு பள்ளிகளை திறந்திருந்தாலும் அங்கு படிப்பதற்கு சாத்தியமில்ல்லை என்று பகார்வால் சமூகத்தை சேர்ந்த பாஷாராத் ஹூசைன் பிபிசியிடம் தெரிவித்தார்.

நாங்கள் ஓரிடத்தில் 3 அல்லது 4 மாதங்கள்தான் வாழ்கிறோம். பின்னர் இன்னோர் இடத்திற்கு செல்கிறோம். அப்படியானால், எங்களுடைய குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்கும்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

தங்களுடைய முகாமிடங்கள் அழிக்கப்பட கூடாது என்பதுதான் தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு அவர் வைக்கின்ற ஒரேயொரு கோரிக்கையாகும்.

சாலை வழியாக தங்களுடைய முகாமிடங்களுக்கு செல்கிறபோது, அங்குள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக பெரிய பிரச்சனைகளை சந்திப்பதாக கூறுகிறார் பாஷாராத் ஹூசைன்.

தங்களுடைய கால்நடைகளோடு வெகுதூரமான இடங்களுக்கு இவர்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அரசு இவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் உதவ முடியும்.

படத்தின் காப்புரிமை EPA

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுவதைபோல, இவர்கள் கால்நடைகளோடு செல்வதற்காக போக்குவரத்துகள் சற்று நேரம் நிறுத்தப்படலாம் என்று அவர் வாதிடுகிறார்.

உள்கட்டுமான வசதிகள் இல்லாததால், பல நடமாடும் பள்ளிகள் அரசின் ஆவண காகிதங்களில்தான் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்று ஜாவித் ராஹி குறிப்பிடுகிறார்.

இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் தங்கி படிக்க இடமில்லை, குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் வசதி இல்லை, புத்தகங்கள் வழங்கப்படுவதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

இத்தகைய நிலைமையில், கல்வியறிவு குறைவாக பெற்றுள்ளவராக இருக்கும் இளைஞர் ஒருவரே, தன்னுடைய இன்னொரு தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க முடியும் என்று ஜாவித் ராஹி வினவுகிறார்.

சுகாதாரம்

பகார்வால் சமூக குழந்தைகள், பெண்களின் சுகாதாரத்தை பற்றி குறிப்பிடும்போது, மிகவும் குறைவான குடும்த்தினரே தங்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர் என்கிறார் ஜாவித் ராஹி.

தங்களுடைய கால்நடைக்கோ, குழந்தைகளுக்கோ இந்த மக்கள் தடுப்பூசி போடுவதில்லை என்று அவர் கூறினார்.

அவருடைய நிறுவனம் ஆய்வொன்றை நடத்தியுள்ளதாகவும், 90 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை என்று அறிய வந்துள்ளதாகவும் ஜாவித் ராஹி கூறுகிறார்.

இந்த மக்கள் காடுகளில் நடமாடும்போது, தங்களுடைய மூலிகை பற்றிய புரிதலையும், அனுபவத்தை வைத்துகொண்டு மூலிகைகளை சேகரித்து, நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருவதையே தொடர்ந்து செய்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

சுத்தமான மலைகளிலும், மாசுபாடு இல்லாத காற்றை சுவாசித்து வாழ்வதாலும், பொதுவாகநோய்கள் இவர்களை அண்டுவதில்லை என நம்புவதாக அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை TWITTER @ PIB_INDIA

இந்த காரணத்தால்தான், அரசின் எந்தவொரு ஆதரவும் இல்லாமால் இந்த சமூகத்தால் இதுவரை வாழ முடிகிறது என்கிறார் அவர்.

இந்தியா முழுவதுமுள்ள இத்தகைய மக்களின் உரிமைகளுக்காக இயற்றப்படும் சட்டங்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஜாவித் ராஹி தெரிவிக்கிறார்.

2006ம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட 'காடுகள் உரிமை சட்டம்' ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று என்று அவர் உதாரணத்தையும் வழங்குகிறார்.

இதுபோல, பட்டியல் பிரிவினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் அல்லது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் இந்த மாநிலத்தில் இன்னும் நடைமுறையாகவில்லை.

ஜாவித் ராஹியின் கூற்றுப்படி, இந்தப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், இவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் சற்ற தணிவு ஏற்படும் என்று தெரிகிறது.

ராணுவத்திற்கு உதவி

இந்தியாவின் எல்லைபுறங்களில் வாழ்ந்து வருகின்ற குஜ்ஜார் பகார்வால் சமூகத்தினர், நாட்டின் பாதுகாப்புக்கு அதிக பங்காற்றி வருகின்றனர்.

இதற்கு வரலாறுதான் சான்று. எல்லைபுற பகுதிகளில் இந்திய ராணுவத்திற்கு உதவி தேவைப்பட்டால், குஜ்ஜார் பகார்வால் குடும்பங்கள் முன்வந்து உதவினர். காவல் நிலைகளுக்கு பொருட்களை விநியோகிப்பதற்கு இவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை KANDHARI / BBC
Image caption பதவியை ராஜிநாமா செய்த தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா.

சமவெளிகளில் அல்லது மலைபாங்கான பகுதிகளில் என எங்கு வேண்டுமானாலும் குஜ்ஜார் பகார்வால் சமூகத்தினர் குடியமர்கின்றபோது, இவர்களுக்கு எதிராக யாராலும் எந்தவொரு புகார்களும் அளித்ததில்லை.

அமைதியை மீட்டெடுப்பதற்கும், சமூகத்தின் நலன்களை வலுவாக வைத்திருப்பதற்கும் இந்த சமூகத்தினர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையிலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு துறைகளிலும் படித்த குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்த மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: