வலியால் துடித்த கோவில் யானை: கருணைக் கொலை செய்ய முடிவு (காணொளி)

வலியால் துடித்த கோவில் யானை: கருணைக் கொலை செய்ய முடிவு (காணொளி)

சேலம் மாவட்டத்தில் உள்ள சுகவனனேஸ்வரர் கோவில் யானையான 'ராஜேஸ்வரி' கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வருகிறது.

முதுமையின் காரணமாகவும், கால்வாத நோயால் பாதிக்கப்பட்டதாலும் அதன் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நிற்க முடியாத அந்த யானை கடந்த மாதம் ஐந்தாம் தேதி முதல் படுத்த படுக்கையாகவே கிடந்தது.

இந்நிலையில், இந்த யானையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. யானையைக் குணப்படுத்த முடியாது என்றால், கருணைக் கொலை செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: