நாளிதழ்களில் இன்று: சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது எதனால்?

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை dailythanthi

சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது குறித்து காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் அனில் கே.குப்தா தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு ஒன்றினை நடத்தியது.

அதில் சிந்து சமவெளி பகுதி, நன்கு மேம்பாடு அடைந்த கட்டமைப்பு வசதிகளையும், கட்டுமான கலையையும் கொண்டது. அம்மக்கள், உலகின் பல்வேறு நாகரிக மக்களுடன் வர்த்தக, கலாசார உறவு கொண்டிருந்தனர். 'எல் நினோ' விளைவு காரணமாக, சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்தது. அதற்காக, மழை பெய்யவில்லை என்று அர்த்தம் அல்ல. நீரோட்டம் குறைந்துவிட்டது. அதனால், அப்பகுதி வறண்டப் பிரதேசம் ஆனது.

விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் இல்லை. இவைதான் அம்மக்களின் முக்கியமான தொழில்கள் என்பதால், அவர்கள் பருவமழை அதிகமாகப் பெய்யும் இந்தியாவின் தென்பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் இடம்பெயர்ந்தனர் என அந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர் என தினத்தந்தி செய்து வெளியிட்டுள்ளது.

தினமலர்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், சசிகலாவில் உறவினர்கள் மற்றும் ஜெயலலிதா உடலை எம்பார்மிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாஇ வெங்கட்ராமன் ஆகியோரிடம் நேற்று குறுக்கு விசாரணை நடந்தது. இந்நிலையில், விசாரணைக்குப் பின்பு பேசிய சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்,'' அப்பல்லோ மருத்துவமனையில் 2016 டிசம்பர் 3-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்களுடன் ஜெயலலிதா 20 நிமிடம் பேசினார். மறுநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது'' என கூறியுள்ளார் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

புதுவை தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்கு கால தாமதமாக வந்த அரசு ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்ய உத்தரவிட்டார் என தினமணி செய்தி கூறுகிறது.

தி இந்து(தமிழ்)

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகள் அனைத்தும் எங்கே போனது?. இந்தப் பணத்தை எல்லாம் யார் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு பணத் தட்டுப்பாடு நிலவ யார் காரணம் ஏதோ சதி நடக்கிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்துள்ளார் என தி இந்து(தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்