''இந்தியாவின் முதல் ரயிலை நான் நேரில் பார்த்தேன்''

ரயில்

இந்திய ரயில்வே தனது 165-ஆம் ஆண்டை திங்கள்கிழமையுடன் நிறைவு செய்தது. ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு இந்தியாவின் முதல் ரயில் போரிபந்தர் மற்றும் தானே இடையே சென்றது.

ரயில்வே வரலாற்று ஆசிரியரான ராஜேந்திர பி. அகலேகர் எழுதிய 'ஹால்ட் ஸ்டேஷன் இந்தியா' என்ற புத்தகம் அந்த காலத்தின் மனநிலையைப் பற்றி நமக்குச் சொல்கிறது.

இந்தியாவில் ரயில்வே அறிமுகம் நவீன இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பொரிபேண்டர் மற்றும் தானே 32 கி.மீ ரயில் பயணத்தை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தினர். இந்த ரயில் மூலம், இந்திய பொருளாதாரம் சக்கரங்களும் உருள அரம்பித்தன.

முதல் ரயிலை நான் பார்த்தேன்

அவர்களில் ஒருவர் சர் டின்ஷா வாச்சா. பம்பாயில் முதல் ரயில் ஓடியபோது அதில் பயணித்த 9 வயது சிறுவனான சர் டின்ஷல் வச்சா, ஒரு சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்.

சர் டின்ஷா வாச்சாவின் வரலாற்று நூல், 1920-ல் வெளியானது.

''முன்பக்கமாக புகையைத் தள்ளிய நீராவி இஞ்சினுடன், சில ரயில் பெட்டிகளும் இரும்பு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. பாம்பே உலகின் அதிசயம் இது.'' என அவர் எழுதியுள்ளார். மேலும் அவர்,'' ரயில் புதிய தோற்றத்தையும், அழகையும் கொண்டிருந்தது. என் கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்தது'' என்கிறார்.

லார்ட் பால்க்லாண்ட் வருகை

பயணிகள் போக்குவரத்துக்கான முதல் ரயில் இஞ்சின், மும்பை துறைமுகத்தில் வந்து 1852-ல் இறங்கியது. இந்த இஞ்சினுக்கு அப்போதைய பாம்பே கவர்னரின் பெயர் சூட்டப்பட்டது.

இந்த இஞ்சின் மும்பை துறைமுகத்திற்கு வந்தபோது, 200 தொழிலாளர்களால் சாலைகளில் இறக்கப்பட்டது. இந்த புதுமையை காண, மும்பை பைகுல்லா பகுதியில் மக்கள் கூடினர்.

பரவிய புரளிகள்

இந்த இஞ்சினால் எப்படி வேகமாக செல்ல முடியும்? திய அல்லது தெய்வீக சக்தி இதில் இருக்கிறது. தீய சக்தி இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என மக்கள் மத்தியில் புரளிகள் கிளம்பின.

இந்த ரயில் இஞ்சின்களுக்கு சக்தி கொடுக்க, ஒரு குழந்தையையும், இளம் தம்பதியையும் பலி கொடுக்க வேண்டும் என்றும், இதற்காக பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஆட்களை தேடுவதாகவும் புரளிகள் வந்தன.

ஒருவர் ரயிலில் பயணித்தால், அவரது வாழ்காலம் குறையும் எனவும் அப்போது மக்கள் நம்பியிருந்தனர்.

முதல் பயணம்

ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு பிற்பகல் 3:30 மணியளவில், பாம்பே கவர்னரின் மனைவியான லேடி பால்க்லாண்ட் ரயிலில் ஏறினார். பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள், பணக்காரர்கள், என 400 விருந்தினர்கள் இந்நிகழ்சியில் பங்கேற்றனர்.

சரியாக 3.35 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்தில் இருந்து தானேவுக்கு ரயில் கிளம்பியது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பொரிபேண்டர் மற்றும் தானே இடையே பயணிக்க 57 நிமிடங்கள் ஆனது. 165 வருடங்கள் கடந்த பிறகும், இப்போதும் ஒரு மெதுவான ரயில் இந்த தூரத்தை கடக்க அதே நேரம்தான் ஆகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: