வாதம் விவாதம் : ''மோதியின் மௌனம் சகித்துக்கொள்ளக் கூடியதல்ல''

  • 20 ஏப்ரல் 2018

நான் பேச வேண்டும் என்று அறிவுரை கூறிய பிரதமர் நரேந்திர மோதி, உன்னாவ், கத்துவா பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்பாக, அவரும் அதனை செய்ய வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை STR

மன்மோகன் சிங்கின் இந்தக் கூற்று சரியா? பெண்கள் பாதுகாப்பில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது என்ற வாதம் சரியா? என வாதம் விவாதம் பகுதியில் நேற்று பிபிசி தமிழ் வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் அளித்த கருத்துகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

'' மன்மோகன் சிங் சரியாகதான் சொல்லியிருக்கிறார். பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுவதை கேட்டுவிட்டு மெளனமாக இருப்பது சரியில்லை. மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமரின் மெளனம் நாட்டு மக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை'' என துரை முத்துசெல்வம் என்ற நேயர் தெரிவித்துள்ளார்.

''மன்மோகன் சிங் எப்போதுமே மௌனம் சாதிப்பார், ஆனால் மோதியோ, எப்போது பேச வேண்டுமோ அப்போது மௌனம் சாதிப்பார். இந்த விஷயத்தில் மன்மோகன் சிங்கே மேல்'' என சரோஜா பாலசுப்பிரமணியன் என்ற நேயர் பேஸ்புக்கில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

''மன்மோகன் சிங் வாதம் சரியல்ல இந்த கண்டிக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு பொறுப்பானவர்கள் மாநில அரசால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மத்திய அரசுக்கு நேரடிப் பங்கு எதுவுமில்லை. சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே நேர்மையான விசாரணைக்கு மத்திய அரசுக்கு பொறுப்பு உண்டு. இந்த இரண்டு நிகழ்விலும் மோதி பேச வேண்டும் என வலியுறுத்துவது அரசியலே'' என எழுதியுள்ளார் சண்முகவேல் வேங்கடாசலபதி.

''பேசவேண்டிய நேரத்தில் சும்மா இருந்தீர்கள். இன்று யார் எழுதி கொடுத்து பேசுகிறார்'' என மன்மோகன் சிங் குறித்து பதிவிட்டுள்ளார் ராமநாதன் துரைசாமி.

''எங்களுடைய பிரதமர் வேட்பாளர் பேச்சு புலி, 54இன்ச் மார்பு கொண்ட மாவீரன் என்று தான் அன்றைக்கு விளம்பரப்படுத்தினார்கள்'' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அன்பரசு ஸ்டாலின் என்ற நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: