நாளிதழ்களில் இன்று: சிறுமிகளைப் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்:

படத்தின் காப்புரிமை Getty Images

சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, தூக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் 'போஸ்கோ' சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது என தினமலர் செய்தி கூறுகிறது.

தினத்தந்தி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். அந்த நோட்டீசில் நாடாளுமன்ற மாநிலங்களவையைச் சேர்ந்த 71 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 7 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள்.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.பி.க்கள் இதில் கையெழுத்திடவில்லை என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி:

படத்தின் காப்புரிமை Getty Images

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், பாஜகவை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் உடன்பாட்டை மேற்கொள்வதற்கு வழி வகுக்கக் கூடிய முடிவை அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு மேற்கொண்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து (தமிழ்)

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் நியமித்த உயர்மட்ட விசாரணை அதிகாரி சந்தானம், நிர்மலா தேவி தொலைப்பேசியில் பேசிய 4 மாணவிகளிடம் அவர்களின் பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடத்தினர் என்றும், ''நாளை அல்லது வரும் வரும் 25-ம் தேதி நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த உள்ளேன். பேராசிரியை நிர்மலாதேவியை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தாலும், அவரிடம் விசாரணை மேற்கொள்ள எனக்கு எந்தத் தடையுமில்லை'' என சந்தானம் கூறியுள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்