சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் சுகவனேஸ்வரர் கோயிலின் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது.

42 வயதான ராஜேஸ்வரி 6 வயதில் இந்தக் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டது.

முதுமையாலும், கால்வாத நோயாலும் பாதிக்கப்பட்டு அதன் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது.

இதனால் நிற்க முடியாமல் மார்ச் மாதம் 5ம் தேதி முதல் படுத்த படுக்கையானது.

தீவிர சிகிச்சை அளித்தும் அதன் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய சென்னை விலங்கு ஆர்வலர்கள் மனு தாக்கல் செய்தனர்.

கால்நடை பராமரிப்பு துறை யானையை பரிசீலனை செய்து 48 மணிநேரத்தில் அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குணப்படுத்த முடியாவிட்டால் ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்யலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர்.

ஆனால், சனிக்கிழமை நண்பகல் 12.20 மணிக்கு இயற்கையாகவே உயிரிழந்தது யானை.

பக்தர்களும், பொது மக்களும் இறந்த ராஜேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: