வாதம் விவாதம்: “ஆபாச தாக்குதல்களுக்கு எதிராக கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்”

முதலில் திமுக எம்.பி கனிமொழி, பிறகு பெண் பத்திரிகையாளர்கள்... தொடரும் ஆபாச தாக்குதல்களுக்கு தீர்வு என்ன?

சட்ட நடவடிக்கையா? மக்கள் போராட்டமா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேள்வி கேட்டிருந்தோம்.

இதற்கு சமூக வலைதளங்களில் பிபிசி நேயர் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

முஷேக் ஃபஹாத் என்ற நேயர் ஃபேஸ்புக்கில், கற்பி ஒன்று சேர் புரட்சி செய் என்ற முறையில் அமையும் மக்கள் போராட் மட்டுமே தீர்வு என்று தெரிவித்திருக்கிறார்.

வினோத் என்பவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் மக்கள் போராட்டமே இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார்.

ரசூல் மைதீன் என்பவர், வன்முறை தூண்டுற மாதிரி பேசுற நிறைய பேரு உண்டு. பிடிச்சு உள்ள போடுங்க. மீடியாவும் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினால் பதிவு செய்யாதீங்க. அதனால்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் பல தவறான எண்ணத்தை மக்களிடம் விதைக்கின்றனர் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

யுவராஜ் கண்ணியப்பன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், நாம் உழைத்தால்தான் நமக்கு சோறு, அதுபோல நாமே நம் நீதிக்காக போராடினால் மட்டுமே வெற்றி எனற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

ராஜசேகர் செம் என்பவர் டுவிட்டரில், சட்டம் மற்றும் சமூகத்தின் மீதும் பயம் கொண்டவர்கள் இப்படி பேசுவார்களா? மக்கள் குறிப்பாக பெண்கள் போராட்டமே தகுந்த பதிலடி கொடுக்கும் என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.

சக்தி சரவணன் தன்னுடைய கருத்தாக, கண்டித்து தக்க ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டியது அக்கட்சியின் பொறுப்புகளில் முதன்மையான ஒன்று என்பதை மறந்து, அமைதி காப்பதென்பது அவர்களது அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துவதோடு நில்லாமல் கண்டனத்திற்குரிய கருத்துகளுக்குத் துணைபோவது போன்றே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

தமிழினியன் என்பவர் தன்னுடைய டுவிட்டர் கருத்து பதிவில், சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் போராட்டம்தான் தீர்வு என்று தெரிவித்திருக்கிறார்.

துரை முத்துசெல்வம் என்கிற நேயர், சட்டநடவடிக்கை மூலமே தீர்வுக்கான வழி காண முடியும். மக்கள் போராட்டம் என்பது தேவையற்றது பேச்சுக்களால் காயப்பட்டவருக்கும் காயப்படுத்தியவருக்கும் இடையேதான் சட்டநடவடிக்கை நடக்க வேண்டும்.

அரசன் என்பவர் தன்னுடைய கருத்தாக, எல்லாவற்றிற்கும் புரட்சியே தீர்வாகும், காலத்தை நோக்கி புதிய இந்தியா செல்வதை பார்க்கத்தான் போகிறோம் என்கிறார்.

இரா.திருநாவுக்கரசு, தருமன் சுந்தரம், தாவூத் ரபீக் ஆகிய அனைவரும் மக்கள் போராட்டமே தீர்வு என்ற கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

தியாகராஜன், லெனின்ராஜ் ஆகியோர் சட்ட நடவடிக்கைதான் தேவை என்ற கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

இதற்கு தகுந்தபடி சட்டநடவடிக்கை எடுத்து அந்தகட்சியில் இருந்து நீக்க வேண்டும். கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் முரளி தேவி.

ப கலைவாணன் என்கிற நேயர், மனநல சிகிச்சை அளிக்க வேண்டும். சமூகத்தில் எவ்வாறு நடத்தை இருக்க வேண்டும் என்ற படிப்பினை அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

சுரேஷ் தனபால் என்பவரோ சட்ட போராட்டம் காலதாமதம் ஆகும். மக்கள் போராட்டம்தான் என்கிற தற்போதய சூழ்நிலையில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் இவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும் என் சான் மான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

குலாம் மைதீன் என்கிற நேயர், காவல்துறை தானாகவே முன்வந்து இவர்களின் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அருண் என்கிற நேயர் சட்டம் தான் இவர்களுக்கு தீர்வு என்ற தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: