நாளிதழ்களில் இன்று: கர்நாடகாவின் பணக்கார முதல்வர் வேட்பாளர் யார்?

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்

படத்தின் காப்புரிமை MANPREET ROMANA

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர்களில், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர், எச்.டி.குமாரசாமி, பணக்கார வேட்பாளராக முதலிடத்தில் உள்ளார்.இவர் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு, 43 கோடி ரூபாய். 2013ல், இவர் சொத்து மதிப்பு, 16 கோடி ரூபாயாக இருந்தது.குமாரசாமியின் மனைவி, அனிதா பெயரில், 124 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .முதல்வர், சித்தராமையா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனக்கு, 11.10 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையும், அசையா சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மனைவி, பார்வதி பெயரில், 7.60 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.பா.ஜ.க சார்பில், முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கும் எடியூரப்பாவுக்கு, 2013ல், 5.8 கோடி ரூபாய் சொத்து இருந்தது. இது, தற்போது, 4.09 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக, பிரமாண பத்திரத்தில் அவர் கூறியுள்ளார் என தினமலர் செய்தி கூறுகிறது.

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி,''சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் கோரதாண்டவம் தான் இந்துத்துவ தீவிரவாதம்.பயத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த குற்றத்தை செய்திருக்கிறார்கள். இதைத்தான் பா.ஜனதா தொடர்ந்து செய்து வருகிறது.ல, பா.ஜ.க. என்ற வார்த்தையை யாரும் உச்சரிக்காத வகையில் நாட்டில் இருந்து அப்புறப் படுத்துவோம்.'' என பேசியுள்ளார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து (தமிழ்)

உலகின் மிகப்பெரிய இந்து மத தார்மீக அறக்கட்டளையான திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ஆந்திர அரசு புதிதாக நியமனம் செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில், பக்கத்து மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உறுப்பினர் பதவி வழங்கப்படுவது வழக்கம். இது காங்கிரஸ் ஆட்சியிலும் தெலுங்கு தேசம் ஆட்சியிலும் நீடித்து வருகிறது. ஆனால், இம்முறை திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் நாயுடு வாய்ப்பு வழங்கவில்லை என தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

பா.ஜ.க தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதே சமயம் வேறு கட்சிகளில் தாம் சேரப்போவதில்லை என்பதையும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார் என தினமணி செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்