மார்க்சிஸ்ட் தலைமைக்கு மீண்டும் யெச்சூரி: காங்கிரஸ் கூட்டணிக்கு வழி ஏற்படுமா?

  • 22 ஏப்ரல் 2018

ஹைதராபாத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)ன் 22-வது மாநாடு தமது அகில இந்தியப் பொதுச் செயலாளராக தற்போது அப்பொறுப்பில் உள்ள சீத்தாரம் யெச்சூரியையே மீண்டும் தேர்வு செய்துள்ளது. இடதுசாரிக் கட்சிகள் மிகப் பெரும் சரிவையும் சோதனையையும் சந்தித்துவரும் இந்த சூழ்நிலையில் இந்தத் தேர்வு எவ்வளவுதூரம் முக்கியத்துவம் வாய்ந்தது?

படத்தின் காப்புரிமை CPI(M)

18ம் தேதி தொடங்கிய மாநாட்டில் 95 பேர் கொண்ட மையக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. அதில் 20 பேர் புதியவர்கள். மையக் குழுவின் முதல் கூட்டத்தில், தமிழ்நாட்டின் ஜி.ராமகிருஷ்ணன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட அரசியல் தலைமைக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. அக்குழுவில் முந்தைய தலைமைக் குழுவில் இருந்த ஏ.கே.பத்மநாபன் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை CPI(M)

முன்னாள் கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட சிறப்பு அழைப்பாளர் குழுவும், ஐந்து நபர் கொண்ட மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கூட்டணி ஆதரவு

யெச்சூரியின் ஆதரவு இந்திய அரசியலில் எதை முக்கியத்துவப்படுத்துகிறது என்று அரசியல் விமர்சகர், செயற்பாட்டாளர் அ.மார்க்சிடம் கேட்டபோது, "இவருக்கு முன்பு பொதுச் செயலாளராக இருந்தவரான பிரகாஷ் காரத் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதை எதிர்ப்பவர் என்று கூறப்படுகிறது. ஆனால் யெச்சூரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குறிப்பாக இந்துத்துவ எதிர்ப்புக் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கு ஆதரவான கருத்துடையவர்.

அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பது அக்கட்சியில் அப்படிப்பட்ட கருத்து மேலோங்கியிருப்பதைக் காட்டுகிறது. கம்யூனிஸ்டுகள் வலுவாக இருக்கும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டுகள் கூட்டணி வைக்க முடியாமல் போகலாம். ஆனால், அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும், பல மாநிலங்களிலாவது காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கலாம்," என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்