மகாராஷ்டிராவில் நடைபெற்ற என்கவுன்டரில் 13 நக்சல்கள் கொலை

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் சத்தீஸ்கர் எல்லையில் நடைபெற்ற என்கவுன்டரில் 13 நக்சல்கள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

"இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக அறிக்கைகள் பெற்றிருக்கிறோம். இந்த என்கவுன்டர், சி-60 சிறப்பு கமாண்டோ அதிரடி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது" என்று பிபிசியிடம் பேசிய சிறப்பு போலீஸ் அதிகாரி ஷரத் ஷெலர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கப்பட்ட இந்த என்கவுன்டர் நடவடிக்கையானது பல மணி நேரங்கள் நீடித்தது. 13 நக்சல்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Image caption கோப்புப்படம்

இது குறித்து கட்சிரோலி மாவட்ட எஸ் பி அபினவ் தேஷ்முக் பிபிசியிடம் கூறுகையில், நக்சல் நடமாட்டம் அதிகம் இருக்கும் பம்ராகட் தாலூக்காவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.

சமீப காலங்களில், நக்சல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரிய என்கவுன்டர் இது என்பதால் போலீஸார் இதனை பெரும் வெற்றியாக கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்