சி.பி.எம் மாநாடு கடந்தகால பெருமையை மீட்டெடுக்குமா?

'இன்றும் ஏகாதிபத்தியத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியாவில், மக்களின் ஜனநாயக அரசை நிறுவ வேண்டுமென்றால், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் உட்பட தொழிலாள வர்க்கத்தினர் இணைந்து ஒப்பந்த ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும்'- இது மாநாட்டின் ஒரு அமர்வில் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தனது இயல்பான நகைச்சுவையான, நையாண்டி பாணியில் உரையாற்றினார். இந்த வார்த்தைகளை தொடக்கமாக வைக்காமல் யாராவது ஒரு தீர்மானத்தை எழுத முடியுமா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

படத்தின் காப்புரிமை cpim.org

பார்வையாளர்கள் கூட்டத்தில் ஆந்திர உறுப்பினர் என்ற முறையில் அமர்ந்திருந்த நான், என்னருகே அமர்ந்திருந்த கர்நாடகத்தை சேர்ந்த சக உறுப்பினரிடம் (தோழர் ராமி ரெட்டியாக இருக்கலாம்), "நீங்கள் எழுத முடியுமா?" என்று கேட்டேன்.

இதுதான் கம்யூனிச சொல்லாட்சியின் தாக்கம்!

கூட்டணி புதிய பிரச்சினை அல்ல

அகில இந்திய சிபிஎம் மாநாட்டைப் பற்றி எழுத நினைத்தபோது நம்பூதிரிபாட்டின் வார்த்தைகள்தான் முதலில் நினைவுக்கு வந்தது. அங்கு முக்கியமான அனைத்து விவகாரங்களும் எழுப்பப்பட்டதா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாவிட்டாலும், 2019 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டிய அவசரத் தேவை பற்றிய தீர்மானமே பிரதானமாக இருந்தது.

ஆனால், இந்த அரசியல் யுத்தத்தில் காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக் கொள்ளலாமா அல்லது தவிர்ப்போமா என்பது மற்றொரு முக்கிய பிரச்சனை. தற்போதைய அகில இந்திய சி.பி.ஐ (எம்) செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் கருத்துகளுக்கு, கட்சியின் முன்னாள் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையிலான எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த விவாதத்தில் உண்மையில் புதிய விசயம் ஒன்றுமே இல்லை. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டில் இந்திரா காந்தி எமர்ஜென்சி அமல்படுத்தியபோது, ஜலந்தரில் நடைபற்ற கட்சியின் பத்தாவது மாநாட்டில் இதைப்பற்றிய விவாதம் நடைபெற்றது.

அந்த மாநாட்டிலும் நான் கலந்து கொண்டேன். ஜனதா கட்சி (பிறகு ஜன சங்கின் உறுப்பினராக இருந்தது) இந்திரா காங்கிரஸை தோற்கடிக்கும் நோக்கத்தில் அமையும் கூட்டணியில் சேர்க்கலாமா என்று அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

ஜனதா கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு சி.பி.ஐ கட்சியின் நிறுவனர் செயலாளர் புச்சலப்பள்ளி சுந்தரய்யா எதிப்புத் தெரிவித்தார், ஆனால் ஜனதா கட்சியை கூட்டணியில் சேர்க்கவேண்டும் என பொலிட் பீரோவின் பிற உறுப்பினர்கள் கூறினார்கள். இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே சமரசம உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தீர்மானம் எதுவாக இருந்தாலும், விவாதம் கண்டிப்பாக நடைபெற வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் சி.பி.ஐ (எம்) கட்சி பலப்பட்டுள்ளதா? பலவீனமாகியுள்ளதா? விசாகபட்டிணத்தில் நடைபெற்ற 21வது மாநாட்டின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் இப்போதும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருக்கிறதா?

படத்தின் காப்புரிமை cpim.org

வலுவானதா, வலுவிழந்தா?

க்ளாஸ்நோஸ்ட், பெரெஸ்ட்ரோக்கிக்கா ஆகியோர், நிதர்சனமான, உண்மையான நிலைமையை மதிப்பிட்டு, அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று கோர்பசேவ் விவரித்தார்.

கோர்பசேவ், சோவியத் ஒன்றியத்தை உடைத்தவர் என்றும் ஸ்டாலின் சர்வாதிகாரி என்றும் மக்கள் கூறுவது வேறு விவகாரம். ஆனால் நிதர்சனத்தை உண்மையாக மதிப்பிடுவதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

நாடாளுமன்றத்தின் விவாதத்தின்போது புச்சலப்பள்ளி சுந்தரய்யா ஒரே எதிர்கட்சியான ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார். ஆனால் தற்போது மக்களவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாக குறைந்துவிட்டது. சொல்லப்போனால், 1955 ஆம் ஆண்டில், ஆந்திரப்பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமையும் நிலைமை ஏற்பட்டபோது முதலமைச்சராக புச்சலப்பள்ளி சுந்தரய்யா பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று தெலுங்கு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய நிலை என்ன? "நாங்கள் பலவீனமாகிவிட்டோம் என்று யார் சொன்னார்கள்? இன்றும் நாங்கள் போராடுகிறோம். தேர்தல், இடங்கள் மற்றும் வாக்குகள் மட்டுமா முக்கியம்? இவை அனைத்தும் தற்காலிகமானவையே" என்று பதில் சொல்கின்றனர்.

இந்தியாவின் கம்யூனிஸ்டுகள் தங்களை சுயபரிசோதனை செய்து புதுமையான முறைகளை பயன்படுத்தி நம் நாட்டிற்கு மார்சிசத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை புரிந்து கொள்ள எப்போதாவது முயற்சி செய்திருக்கிறார்களா?

தேர்தல்களே அனைத்திற்கும் அடிப்படை என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட, அவை ஜனநாயகத்தின் மைல்கற்கள் அல்லவா? கம்யூனிச போராட்டங்களின் காரணமாக, மக்களுக்கு போதுமான அளவு அதிகாரம் கிடைத்திருக்கிறதா? அது ஆக்கபூர்வமானதாக இருக்கிறதா?

இந்துத்துவா கொள்கைகளை அவர்கள் இலக்காக கொண்டார்களா?

பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், எந்த வகையான மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும்? மக்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் தற்போதைய பொருளாதார நடைமுறைகளை எவ்வாறு எதிர்கொள்வது?

மாறுபட்ட மற்றும் வளமான கலாசாரம் கொண்ட இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றும் தீய திட்டத்தை எப்படி நிறுத்துவது? மக்களின் கலாசார இயக்கங்களை எவ்வாறு உருவாக்குவது? இதுபோன்ற பிரச்சனைகளுக்கு கம்யூனிஸ்டுகள் முன்னுரிமை கொடுத்து விவாதிக்க வேண்டும்; செயல்பட வேண்டும்.

விவாதிக்கப்பட வேண்டிய பல சிக்கல்களுக்கு பெரிய அளவிலான மாநாடுகளில்கூட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

'சமூக நீதி' என்ற தலைப்பை உதாரணமாக சொல்லலாம்.

இந்த விசயம் முற்றிலுமாக விவாதிக்கப்படவில்லை என்று சொல்லிவிட முடியாது. தெலுங்கானா மாநில சி.பி.எம் பொது செயலாளர் தமினீனி வீரபாத்ரம் தலைமையில் 'சமூக நீதி'க்கான கம்யூனிஸ்டுகளின் முதல் பேரணி நடத்தப்பட்டதை மறுக்க முடியாது.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN/AFP/GettyImages

இடதுசாரிகள் தலைமையிலான பேரணியால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. முடிவடையும் விழாவில் சீதாராம் யெச்சூரி 'லால்-நீல்' என்ற முழக்கத்தை முன்வைத்தார். இடதுசாரி, எஸ்.சி, எஸ்.டி, பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் பலர் எதிர்கொள்ளும் அரசியல், கலாசார, பொருளாதார சிக்கல்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். பொதுமக்களில் நூற்றில் 80 பேர் இந்த பிரிவுகளுக்குள் அடங்குவதால் இந்த முழக்கம் அமைப்பின் ஒற்றுமைக்கு ஒரு சின்னமாக உள்ளது.

பொருளாதார அடிப்படையில் மாற்றம் ஏற்பட்டால், நாட்டின் சமூகப் பிரச்சினைகளை தானாகவே தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள், இதுவரை இந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. இதனால், சாதி அமைப்பு போன்ற இந்த செயல்முறை சிக்கல்களை பல தசாப்தங்களாக கம்யூனிஸ்டுகள் கண்டுகொள்ளவில்லை என்பது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சாதி அமைப்பிற்கான போராட்டமானது, வர்க்க அமைப்புமுறைக்கு எதிராக போராடுவதாக இருக்குமோ என்ற அச்சத்தில் கம்யூனிஸ்டுகள் இந்த விசயத்திற்கு குறைந்த அளவே முக்கியத்துவம் கொடுத்தனர். இதன் விளைவாக, சமூக அடக்குமுறைக்கு எதிராக போராடும் மக்கள் கம்யூனிஸ்டுகளிலிருந்து தூர விலகிவிட்டனர்.

உண்மையில் இந்தியாவில் முப்பதுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. இந்த குழுக்கள் இடையிலான பிளவுகளுக்கு பிரதான காரணம் வர்க்க போராட்டம் அல்லவா?

சமீப காலங்களில் சில முக்கியமான மாற்றங்கள் காணப்பட்டாலும் அது போதாது. மாநிலத்திற்குள்ளேயே 100 அமைப்புகளை ஒன்றிணைத்து தெலுங்கானா மக்கள் கூட்டமைப்பை உருவாக்கியது போல, தேசிய அளவில் பகுஜன் மற்றும் இடதுசாரி கூட்டணிக்கான தேவை இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சாதி ஆதிக்கம் பற்றி விவாதிக்கப்படுகிறதா?

மேல் சாதியினர் மற்றும் மேல் வர்க்கம் ஆதிக்கம் செலுத்தும் விதம் தொடர்பான பிரச்சனைகள் இதுபோன்ற பெரிய மாநாடுகளில் விவாதிக்கப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.

சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்தியாவின் பல இனங்கள் இருப்பது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், (1942-43 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தீர்மானம்) அதன் முக்கியத்துவம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உணரப்படவில்லை.

தற்போது இந்தியா தேசிய இனங்களின் சங்கமம் என்று கூறுவது குற்றமாகவும் தேசிய எதிர்ப்பாகவும் சித்தரிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற விசயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பல்வேறு தேசிய மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனித்துவத்தை பிரதிபலிக்க வேண்டிய கட்சி, தங்கள் பலவீனத்தால் அதை செய்யமுடியாமல் இருக்கிறது.

'பஞ்சாப் சிந்து குஜ்ராத் மராத்தா திராவிட உத்கல வங்கா' என்று ரபீந்திரநாத் தாகூரின் பாடலை எப்போதும் மறக்கக்கூடாது.

ஒற்றுமைக்கான நாட்டுப்பண்ணில் இருந்து உத்வேகம் பெறவேண்டாமா?

மார்க்ஸ் "உலகின் ஐக்கிய தொழிலாளர்கள்!" என்று கூறினார். தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றி அதன் ஒற்றுமையில் உள்ளது.

சித்தாந்தங்களின் அடிப்படையில், சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் தங்கள் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்கின்றன என்பது அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டுமே தெரியும்.

படத்தின் காப்புரிமை CPI(M)

ஆனால் 'கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்து, தங்களைக் கெடுத்துக் கொண்டன. இல்லாவிட்டால் ஆட்சி அமைத்திருக்காலாம்' என்று பொதுமக்கள் கருதுவதாக உணர்கிறேன்.

இறுதியாக, பல பிரிவுகளாக பிளவுபட்டு இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் திறமைகளைத் தாண்டி மக்கள் இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே உள்ள வேறுபாடுகளை ஆளும் வர்க்கங்கள் குறைகூறுகின்றன. தொடர்ந்து போராடிவரும் மாவோயிஸ்டுகளால் அவர்களது தன்னலமற்ற தன்மையை நிரூபிக்க முடியாது.

இந்தியாவில் இன்னும் கம்யூனிச இயக்கம் நீடித்திருப்பதற்கு காரணம், கைகளில் செங்கொடிகளை ஏந்திக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான உறுப்பினர்களே. அதே அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் தவறுகளை சரிசெய்தால், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடந்தகால பெருமைகளை மீட்டெடுக்கமுடியும் என்று நம்புகிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்