ஆதார் போன்ற பயோமெட்ரிக் அடையாளத் திட்டம் அமெரிக்காவில் இல்லையே ஏன்?

ஆதார் படத்தின் காப்புரிமை Getty Images

100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் தற்போது ஆதார் என எனப்படும் பயோமெட்ரிக் சார்ந்த 12-இலக்க தனித்துவ அடையாள எண் உள்ளது. மக்களுக்கு அளிக்கப்படும் மானியங்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆதார் திட்டம், இப்போது சர்ச்சைக்குரிய டிஜிட்டல் அடையாள திட்டமாக வளர்ந்துள்ளது. ஏன் மிகவும் முன்னேறிய நாடுகள் இதேபோல் அடையாளம் காணும் திட்டங்களைப் பின்பற்றவில்லை என்பதைப் பற்றி மிஷி சௌத்ரி எழுதுகிறார்.

ஆதார் ஒரு அற்புதமான தொழில் நுட்ப வடிவமாக இருந்தால், தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேற்ற நாடுகளே ஏன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை?

ஒற்றை எண் அடையாள அமைப்பை அனைத்துக்கும் பயன்படுத்துவது நல்ல யோசனை அல்ல என ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல கணினி விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களும் வாதிடுகின்றனர்.

பயோமெட்ரிக் தகவலுடன் தொடர்புடைய இதே போன்ற தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை 2010-ம் ஆண்டு பிரிட்டன் கைவிட்டது.

இஸ்ரேலில் கைரேகை அல்லாத, ஒரு அடையாள அட்டை உள்ளது. இங்கு குடிமக்களின் தகவல்கள் எங்கும் சேகரிக்கப்படாது. ஆனால், தகவல்கள் அடையாள அட்டையில் மட்டும் இருக்கும்.

அமெரிக்காவிலும் இதுபோன்ற அடையாள அட்டை திட்டம் தேசிய அளவில் இல்லை. கலிபோர்னியா மற்றும் கொலராடோ ஆகிய இரண்டு மகாணங்களில் மட்டும், ஓட்டுநர் உரிமை விண்ணப்பங்களுக்காக கைரேகை எடுக்கப்படுகிறது.

இந்த நாடுகளில் பெரும்பாலானவை, தங்கள் நாட்டுக்கும் வரும் வெளிநாட்டவரின் பயோமெட்ரிக் தகவல்களையே சேகரிக்கின்றன. தங்களது சொந்த குடிமக்களின் தகவல்களை அல்ல.

படத்தின் காப்புரிமை Getty Images

பயோமெட்ரிக் உடன் வாக்காளர் பதிவையும், வங்கி கணக்கையும் இணைப்பது என்பது சீனா, ஆப்ஃபிக்கா, இராக், பிலிப்பைன்ஸ், வெனிசிசுலா போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளது.

அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மையப்படுத்தப்பட்ட தகவல்கள் அதிகமான சமூக அபாயங்களை உருவாக்கும். ஏனெனில், தரவு கசிவு ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் மாற்ற முடியாத தகவல்களை இது கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தகவல் கசிந்துவிட்டது என்று யாரும் தங்களது மரபணுத் தகவல்கள் அல்லது கைரேகைகளை பிற்காலத்தில் மாற்ற முடியாது.

தகவல் துறையில் இருக்கும் பாதிப்புகள் மற்றும் பிழைகளை தீர்க்கக்கூடிய பாரம்பரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதார் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

கண்காணிப்பு

ஆதார் தகவல்கள் அரசின் கண்காணிப்புக்காக தவறாக பயன்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாதது.

நீண்டகாலமாக இறுக்கமான கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு உட்பட்டுள்ள சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில், 12 முதல் 65 வயதினர்களின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், ரத்த வகைகள் ஆகியவற்றை சேகரித்துள்ளனர். இந்த தகவலானது, குடியிருப்போர் தகவல் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு கல்வி நிறுவனங்கள், மருத்துவ மற்றும் வீட்டு மானியங்களை மக்கள் அணுகுவதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், முகம் அடையாளம் காணும் மென்பொருள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுத்தளங்களுடன் இணைந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இங்கு ஏற்பட்டுள்ளன. ஒரு நீண்ட கால சிறந்த தொழில்நுட்ப திட்டத்தை ஒரு நாடு எப்படி உருவாக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

ஆனால், இந்தியாவில் ஆதார் தனது இலக்குகளுக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குடிமக்களின் விவரங்கள் ஏற்கனவே நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கண்காணிப்பிற்கான தரவை தவறாக பயன்படுத்துவது பற்றிய அச்சங்களை இது உறுதிப்படுத்துகிறது.

ஆதாரின் ''அங்கீகரிப்பு'' ஏற்கப்படாததால் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் உணவு உதவி போன்ற நன்மைகள் மறுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தினமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

பல தொழில் முனைவோர்கள் தரவு அடிப்படையிலான கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். மோசடி மற்றும் ஊழல் போன்ற பிரச்சனைகளை இது தீர்க்கலாம்.

ஆனால் பலருக்கு, இது தினசரி வாழ்வதற்கான தேவை. ஆதார் திட்டத்தின் மூல நோக்கம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் இழப்பு இல்லாமல் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே.

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தற்போது ஆதாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கிறது.

ஆதார் பதிவை கட்டாயமாக்க முடியாது என நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் கூறியுள்ளது. ஆதார் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள பல சமுக நலத்திட்டங்கள் தொடர்பான மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இப்போது அனைத்து சமுதாயங்களிலும் முன்னணிக்கு வந்துள்ள ஆதார் பிரச்சனை குறித்து, வலிமைமிக்க நீதிமன்றம் பேசுவதற்காக நாம் காத்திருந்தோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்