நாளிதழ்களில் இன்று: ஜிசாட்-11 செயற்கைக்கோள் ஏவலை தள்ளிவைத்த இஸ்ரோ

  • 26 ஏப்ரல் 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி - செயற்கைக்கோள் ஏவலை தள்ளிவைத்த இஸ்ரோ

படத்தின் காப்புரிமை isro.gov.in
Image caption ஜிசாட்-19 (கோப்புப் படம்)

வரும் மே 25ஆம் தேதியன்று ஏவப்படுவதாக இருந்த ஜிசாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அந்த செயற்கைக்கோளை மேற்கொண்டு பரிசோதனை செய்வதற்காக அதன் ஏவல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'தலைமை நீதிபதியை அச்சுறுத்தவே தீர்மானம்'

படத்தின் காப்புரிமை DDNEWS

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தின் உண்மையான இலக்கு பிரதமர் நரேந்திர மோதிதானே ஒழிய தீபக் மிஸ்ரா அல்ல என்று ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில்’ மின்ஹாஸ் மெர்ச்சண்ட் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியா விவகாரம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிப்பதில் இருந்து தீபக் மிஸ்ரா விலகி இருப்பதற்காக அச்சுறுத்தும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - அழுகிய நிலையில் கிடைத்த சிறுமியின் உடல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப் படம்)

டெல்லி அருகே உள்ள ஃபரிதாபத் நகரில் காணாமல் போன ஐந்து வயது சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்படும் முன்பு அச்சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல் துறையினர் இன்னும் எதுவும் கூறாத நிலையில், அவரைக் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 26 வயதாகும் உறவினர் அச்சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

தினமணி - பத்திரிகை சுதந்திரத்தில் சரியும் இந்தியா

படத்தின் காப்புரிமை Getty Images

பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 138வது இடத்தில உள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா 136வது இடத்தில் இருந்தது. மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: