வாதம் விவாதம்: `வஞ்சிப்பதற்கும் ஓர் எல்லை உண்டு`

காவிரி நதிநீர் பங்கீடு: வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு படத்தின் காப்புரிமை AFP

காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது.

காவிரி விவகாரத்தை மத்திய அரசு அரசியல் ஆக்குகிறது எனும் விமர்சனத்தை இந்த நடவடிக்கை மெய்ப்பிக்கிறதா என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். இதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் ஆர்வமுடன் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

''100% அரசியல் தான் உள்ளது. இவர்கள் நடத்தும் வாக்குவங்கி அரசியல், இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டது. ஆட்சி செய்பவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதே முதற்பணி என்பதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள்'' என நெல்லை டி முத்து செல்வம் தெரிவித்துள்ளார்.

''கர்நாடக சட்டமன்றத் தேர்தலில்,வெற்றிக்கனவோடு இருக்கும் மோடி அரசு அவகாசம்தான் கேட்கும்.வாரியம் அமைக்காது. முடிவு, பாஜக வுக்குப் பாதகமானால் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படும்!'' என பொன்னுசாமி தமிழன் எனும் நேயர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை PeriyarPeran/Twitter

''இரண்டு வாரத்தில் தீர்ப்பை அமல்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி'' என திருமலை தெரிவித்துளளார்.

'' காவிரி நீர் பாசனத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கும் அதுதான் ஆதாரமாக இருக்கிறது. எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக கூறிக்கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதியாமல் மக்களின் குரலுக்கும் செவி சாய்க்காமல் சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பது சாட்சாத் மத்திய அரசே!'' என ட்விட்டரில் ராஜசேகர் எனும் நேயர் எழுதியுள்ளார்.

''மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே காவிரி விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்படவில்லை'' என்கிறார் ஏசுதாஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்