வாதம் விவாதம்: "மக்கள் மேல் சற்றும் அக்கறை இல்லாத அரசாங்கம்"

ரயில்வே படத்தின் காப்புரிமை Getty Images

உத்திரப்பிரதேசத்தில் லெவல் கிராசிங்கில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி 13 குழந்தைகள் பலி. ஆளில்லா லெவல் கிராசிங்குகள் இன்னும் நீடிக்க காரணம். தொழில்நுட்ப போதாமையா? அல்லது அரசியல் உறுதியின்மையா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் ஆர்வமுடன் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நேயர் முத்துசெல்வம் "விழிப்புணர்வு போதாமையே விபத்துக்களுக்கு காரணம். ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை அகற்றுவதில் ரயில்வே துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இடங்களுக்கு தக்கவாறு மேம்பாலங்களையும், சுரங்கப்பாதைகளையும் அமைத்து தான் வருகிறது. பணம் தாராளமாக கிடைத்தால் ஒரே ஆண்டிற்குள் ஆளில்லா இரயில்வே கிராஸிங்கை மூடிவிடலாம்" என்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை @SIVAKTAMILAN

"மக்களின் மேல் அரசாங்கத்துக்கு உள்ள அக்கறையின்மை, பொறுப்பின்மை மனிதனுக்கு மனிதன் காட்டும் அடிப்படை தார்மீக உணர்வின்மைதான் இதற்கு காரணம்" என்று கூறியுள்ளார் சுப்புலட்சுமி

படத்தின் காப்புரிமை @ANTHONYPAULRAJ1

"உயிரின் மதிப்பு அரசியல்வாதிகளை பொறுத்த வரையில் அவ்வளவுதான். எதிலும் ஊழல், லஞ்சம், கமிஷன், இதற்கு பிறகும் திருந்த மாட்டார்கள்" என்று தன் கருத்தை பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

படத்தின் காப்புரிமை @JACKSOCTOCAT
படத்தின் காப்புரிமை @ARUN01066836

இதுகுறித்து தன் கருத்தை பகிர்ந்துள்ள ராஜவேல் ராஜா "மனிதனுக்கு பாதுகாப்பு அத்தியாவசிய தேவை என்பதை கருதாது இதற்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்