வாதம் விவாதம்: "இந்தியாவில் மூன்றாவது அணி கூட்டாட்சிக்கு உதவாது; மோதிக்குதான் உதவும்"

  • 30 ஏப்ரல் 2018
வாதம் விவாதம்

பாஜக-காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முயற்சி. கூட்டாட்சி அமைப்பை மேம்படுத்த இத்தகைய முயற்சி உதவுமா? அல்லது பாஜக-வுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்றுபடுவதை இது குலைக்குமா? என்று பிபிசி தமிழ் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் ஆர்வமுடன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நேயர் முத்துசெல்வம், "மாற்றுக் கொள்கையை முன்னிறுத்தினால்தான் அது மூன்றாவது அணி. தங்கள் அணிக்கு யார் தலைமை ஏற்பது என்பதே மூன்றாவது அணி என்று சொல்லிக் கொள்ளும் மாநிலக்கட்சிகளுக்கு பெரிய காரியமாக தற்போது இருக்க போகிறது. தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய தேசிய கட்சிகள், மாநில ஆட்சி பீடங்களை கைப்பற்ற நினைப்பதால் தான் இந்த நிலை வந்துவிட்டது. மாற்றுக்கொள்கையை வலியுறுத்தும் கட்சியே மூன்றாவது அணிக்கு தலைமைக்கு ஏற்க தகுதியானது" என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை @UMAKRISHH

"இந்தியாவை பொறுத்தவரை முன்றாவது கூட்டணி தேர்தலுக்காக உருவாகி, தேர்தல் முடிந்தவுடன் கரைந்து போகும் கூட்டணிதான்" என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார் வேலு.

படத்தின் காப்புரிமை @ANBANANDAM1

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகள் மீதும் மக்கள் நம்பிகை இழந்துவிட்டதாகவும், மூன்றாவது அணி மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவதாகவும் கூறுகிறார் கார்த்திக் ராஜா.

படத்தின் காப்புரிமை @BALANKALKI

"பாஜக காங்கிரஸ் தவிர்த்த கூட்டாட்சி முறை, இந்தியாவில் எந்த அளவில் சாத்தியம் என்பதை காலம் தான் கூற வேண்டும்" என்று ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார் அருண்

படத்தின் காப்புரிமை @VELA1602

இவ்வாறு முடிவெடுப்பது பா.ஜ.காவுக்கே சாதகாமாக முடியும் என்று கூறியுள்ளார் தமிழ்பிறவி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்