பரவியது பெண்ணை நிர்வாணமாக்கும் வீடியோ: நால்வர் கைது

பெண்ணை நிர்வாணமாக்கும் வீடியோ வைரலாகப் பரவியது தொடர்பாக பிகாரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிகார் மாநிலம் ஜஹானாபாதில் ஒரு பெண்ணின் ஆடையை பலாத்காரமாக அவிழ்க்கும் காணொளிக் காட்சி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்தனர்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பட்னா மண்டல காவல்துறை ஐ.ஜி நையர் ஹன்னைன் கான் இந்தத் தகவலை தெரிவித்தார். இந்த காணொளிக் காட்சி 28 ஏப்ரல் இரவு காவல்துறைக்கு கிடைத்ததாக கூறிய அவர், அதன்பிறகு உடனே துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

குற்றவாளிகள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்றும், ஆனால் அந்த பெண் இதுவரை காவல்துறையை தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

அண்மையில் வெளியான இந்த காணொளிக் காட்சியில் ஒரு பெண்ணின் ஆடையை உரிக்கும் துச்சாதனர்களாக சிலர் செயல்படுவதையும், அவர்களிடம் தப்பிக்க அந்த பெண் போராடுவதையும் சுற்றி நிற்கும் பல இளைஞர்கள் பார்த்து சிரிப்பதும் இடம் பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை iStock

காணொளியை பரப்பிய குற்றச்சாட்டு

இந்த காணொளியில் காணப்பட்ட ஒரு இரு சக்கர வாகனம் தான் குற்றவாளிகளை அடையாளம் காண உதவியது. ஆனால் அந்த இரு சக்கர வாகனம் இதுவரை கைப்பற்றப்படவில்லை.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனிலும் இந்த வீடியோ இருந்ததாகவும் என நையர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த பலரும் தடுக்க முன்வரவில்லை என்பதும் காணொளி மூலம் தெரிகிறது.

இந்த காணொளியை மற்றவர்களுக்கு அனுப்புவதும், பார்ப்பதும் குற்றம் என்று காவல்துறை ஐ.ஜி கூறுகிறார். இந்த சம்பவம் தொடர்பாக யாருக்காவது ஏதாவது தகவல் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்று அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்