திருப்பூர்: கூட்டுறவு வங்கி வேட்பு மனுத் தாக்கலின் போது தடியடி (காணொளி)

திருப்பூர்: கூட்டுறவு வங்கி வேட்பு மனுத் தாக்கலின் போது தடியடி (காணொளி)

திருப்பூர் குமரன் கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கள்கிழமை நடந்தது. அப்போது அதிமுக தவிர்த்த பிற கட்சியினரை போலீசார் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி மற்ற கட்சியினர் கூட்டுறவு வங்கியினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும் அதிமுக தவிர மற்ற கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் எதிர்க் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதில் நான்கு பேர் காயமடைந்தனர். எதிர்கட்சிகள் போராட்டம் மற்றும் போலீசாரின் தடியடி காரணமாக தேர்தல் அதிகாரி ஷோபா வேட்பு மனு தாக்கலை தேதி கூறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: