அதிகாரிகளை விமர்சனம் செய்யும் விசில் செயலி: கமல் ஹாசன்

தினமலர்

ஊழல்களை வெளிப்படுத்தும் மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலி

போலீசுக்கோ, அதிகாரிகளுக்கோ மாற்றானது அல்ல மய்யம் விசில் செயலி, அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய, அவர்களையே விமர்சனம் செய்யக்கூடிய கருவியாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்தார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

கமல் ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் மொபைல் செயலி திங்கள்கிழமை செயல்பட தொடங்கியுள்ளது.

நம்மை சுற்றி நடக்கின்ற குற்றங்கள், ஊழல்கள், மாசு போன்றவற்றை ஊதி பெரிதாக்கும் அபாய சங்காக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனை தொடர்பாக கவர்னருடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நடைபெறும் போராட்டங்கள் கூறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அச்செய்தி கூறுகிறது.

தினமணி - மருத்துவ சிசிக்சைக்கு தமிழ்நாடு வந்துள்ள 15 லட்சம் பேர்

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption தமிழ் நாடு ஆளுநர் பன்வாரிலால் புராஹித் (நடுவில்)

நோய் அறிதல் மற்றும் சிகிச்சைக்காக தமிழ் நாட்டிற்கு இதுவரை 15 லட்சம் பேர் வந்துள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புராஹித் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

உலக வர்த்தக சபையின் சார்பாக மருத்துவ துறையில் சிறந்த பங்களிப்பை அளித்தோருக்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஆண்டாக 15 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

`தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

Image caption கோப்புப்படம்

ஜெடா குண்டுவெடிப்பு நடத்தியவர் இந்தியர், உறுதி செய்யும் டிஎன்ஏ சோதனை

ஜெடாவில் முயறியடிக்கப்பட்ட தற்கொலை தாக்குதலை நடத்தியவர் லக்ஷர் இ தெய்பாவோடு இயங்கி வந்தவராக கூறப்படும் இந்தியரான ஃபயாஸ் காக்ஸி என்று டிஎன்ஏ சோதனையின் அடிப்படையில் சௌதி அரேபியா உறுதி செய்துள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சௌதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர நகரமான ஜெடா நகரத்திலுள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கு வெளியே ஃபயாஸ் காக்ஸி தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் ஆவார்.

2016ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த தற்கொலை தாக்குதலில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர்.

அன்றே மேலும் இரு தாக்குதல்கள் காடிஃபிலுள்ள ஷியா மசூதியிலும், மெதீனாவிலுள்ள மஸ்ஜிட் இ நாப்விக்கு வெளியிலும் நடத்தப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்