மும்பை செய்தியாளர் கொலை வழக்கு: சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை

  • 2 மே 2018
மும்பை செய்தியாளர் கொலை வழக்கு: சோட்டா ராஜன் குற்றவாளி என தீர்ப்பு படத்தின் காப்புரிமை Getty Images

மும்பையின் பவை பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பலால் பத்திரிகையாளர் ஜோதிர்மோய் டே கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று புதன்கிழமை மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒன்று குற்றம்சாட்டப்பட்ட தாதா சோட்டா ராஜன் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

மற்றொரு குற்றவாளியான மும்பையின் முன்னாள் பத்திரிகையாளர் ஜிக்னா வோரா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சோட்டா ராஜன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு, அவர் இந்தோனீஷியாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டார். இது மட்டுமின்றி மேலும் 17 பேரை கொன்ற வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மும்பையின் முக்கிய குற்றப் புலனாய்வு நிருபராக கருதப்பட்ட ஜோதிர்மயி டே, ஜே-டே என்ற பெயரில் தனது செய்திகள் எழுதி வந்தார். 2011ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி மதியம் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர், நான்கு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் இதுவரை 155பேர் வாக்குமூலம் அளித்த போதிலும், இந்த கொலையை நேரில் பார்த்ததாக யாருமே சாட்சி சொல்லவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: