நாளிதழ்களில் இன்று: அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் சந்தித்தாரா?

  • 3 மே 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து(ஆங்கிலம்) - மருத்துவமனையில் ஆளுநரை சந்தித்தாரா ஜெயலலிதா?

படத்தின் காப்புரிமை Getty Images

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தப்பட்ட போது, ஆளுநர் பார்க்க வந்தது ஜெயலலிதாவிற்கே தெரியாமல் இருக்கலாம் என சசிகலாவின் உறவினரான மருத்துவர் சிவகுமார் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிடம் தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் இவரும் ஒருவர்.

முன்னதாக, சசிகலா இது குறித்து தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ஆளுநர் வித்தியாசாகர ராவ் ஜெயலலிதாவை நலம் விசாரிக்க வந்தபோது அவர் பிஸியோதெரப்பி செய்து கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். தற்போது, அளுநர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று மருத்துவர் சிவகுமார் கூறியிருப்பது சசிகலா கூறியதற்கு முரணாக இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் குறித்து தினமலர் வெளியிட்டுள்ள கார்ட்டூன்

படத்தின் காப்புரிமை DINAMALAR

தினமணி - டிரம்பை விட மோதியை பின்தொடர்வோர் அதிகம்

சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பைவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பர்ஸன் கோன் அண்ட் வோல்ப் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம், "முகநூலில் உலகத் தலைவர்கள்" என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகத் தலைவர்களில் மற்றவர்களை காட்டிலும் பிரதமர் மோதி 4.32 கோடி பின்தொடர்வோருடன் முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டிரம்ப், 2.31 கோடி பின்தொடர்வோருடன் இரண்டாம் இடத்தில் உள்ளதாக அச்செய்தி விவரிக்கிறது.

இவர்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் அதிக அளவில் புகைப்படங்களும் வீடியோக்களும் பகிரப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயத்துறை மற்றும் அதன் தொடர்புள்ள துறைகளை மேம்படுத்தவும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், 11 திட்டங்களை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: