புழுதிப்புயல் பாதிப்பு: 44 பேர் உயிரிழந்துள்ள ஆக்ராவில் தொடரும் மின் துண்டிப்பு

இந்தியாவின் வட பகுதியிலுள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆக்ராவின் பல கிராமங்களில் மின்சார துண்டிப்பு தொடர்ந்து நிலவி வருகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த மாவட்டத்தில் புழுதிப்புயலால் உயிரிழந்தேரின் எண்ணிக்கை 44ஆக உயாந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமையன்று திடீரென வீசிய புழுதிப்புயல் மணிக்கு சுமார் 132 கிலோமீட்டர் வேகத்தில் வீசி, இந்தியாவின் வட பகுதி மாநிலங்களில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

அதிக உயிரிழப்புகளும், உடமைகள் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ள ஆக்ராவிலுள்ள பல கிராமங்களில் உத்தர பிரதேச துணை முதலமைச்சர் தீபக் ஷர்மா வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டார்.

ஆக்ரா (கிராம) காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் பாடோரியா பிபிசியிடம் இதுபற்றி தெரிவிக்கையில், வானிலை கணிப்பு எச்சரிக்கை வெளிவந்தவுடன் மக்களுக்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"கிராமபுறங்களிலுள்ள பெரும்பாலான வீடுகள் ஓலை குடிசைகள் அல்லது மணல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்டவை என்பதால் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன" என்று கூறினார்.

அடுத்த 72 மணிநேரத்தில் இதே போன்ற புயல் இந்த பிரதேசத்தை மீண்டும் எந்நேரமும் தாக்கலாம் என்று இன்னொரு எச்சரிக்கையும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மாவட்டத்தின் காதிராக்ரா டெக்சிலின் கீழுள்ள பாதராவிலுள்ள கிராமங்கள் அதிகாரிகளிடம் இருந்து தங்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை VIVEK JAIN

பாதராவில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர், கடும் காயங்களோடு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த தம்பி சிங் தன்னுடைய காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த புயலில் அவரது வீட்டின் கூரை விழுந்தபோது இறந்த தன்னுடைய தந்தையின் இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்கு அவர் மருத்துவமனையில் இருந்து விரைவாக வெளியேற வேண்டியிருந்தது.

ஆக்ரா மாவட்டத்திலுள்ள கதிராக்ராவில், பாதரா மற்றும் டுன்கார்வாலா கிராமங்களை சோந்த பலரும் புழுதிப்புயல் தங்களுடைய கிராமத்தை தாக்கிய அந்த கொடிய இரவை நினைவுகூர்கின்றனர்.

10 வயதான அபிஷேக் குமார் அப்போது வீட்டில் இருந்தார். அவரையும், அவரது சகோதரரையும் இடிபாடுகளில் இருந்து கிராம மக்கள் மீட்டனர்.

அவரது சகோதரர் கடும் காயங்களை பெற்றிருந்தார்.

இந்த புழுதிப்புயலால் இறந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காயமடைந்தோர் விரைவில் குணமடைவார்களாக என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும் வகையில் அந்தந்த அரசு துறைகளோடு, அதிகாரிகள் இணைந்து ஒத்துழைக்க கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தன்னுடைய டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

வட இந்தியாவில்125 பேரை காவு வாங்கிய புழுதிப்புயல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட இந்தியாவில்பு 125 பேரை காவு வாங்கிய புழுதிப்புயல் (காணொளி)

புயலால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்த மாவட்டத்தை சேர்ந்த 44 பேருக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆக்ரா மாவட்ட மாஜிஸ்டிரேட் கௌரவ் டயால் உறுதி செய்துள்ளார்.

மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக இருந்த ஆக்ரா இந்த புழுதிப்புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்