வாதம் விவாதம்: "வேண்டுமென்றே குளறுபடி செய்த சிபிஎஸ்சி சமாளிக்கப் பார்க்கிறது"

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக மாணவர்களுக்கு வட மாநில நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது அவர்களது விருப்பத்தின் அடிப்படையிலேயே என்று சி.பி.எஸ்.இ. அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழின் நேயர் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

"ஒரு இடத்துக்கு மிக அதிகமாக ஆட்கள் விண்ணப்பித்தால். அவர்களை ராஜஸ்தானுக்கா அனுப்புவது. அந்த ஊரிலேயே மேலும் ஒரு பள்ளியை அனுமதிக்க வேண்டியதுதானே" என்று தர்மநாயகம் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"மாணவர்கள் தமிழகத்திலுள்ள மூன்று மையங்களைதான் தேர்வு செய்துள்ளார்கள். ஆனால் சிபிஎஸ்சி வேண்டுமென்றே குளறுபடி செய்துள்ளது. இப்போது சமாளிக்கப் பார்க்கிறது" என்று சுந்தர் என்பவர் பதிவிட்டுள்ளார்.

செந்தில் குமார் என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர், "நீட் தேர்வு விண்ணப்பத்தில் தேர்வு மையம் சரியாக தேர்ந்தெடுக்காமல் தவறிழைத்ததால் தான் இன்று இவ்வளவு மாணவர்களுக்கும் கேரளா, ராஜஸ்தான் என பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ஒரு சாரார் கூறுவது முழு பூசணியை சோற்றில் மறைப்பதற்கு சமமே" என்று கூறியுள்ளார்.

"சி.பி.எஸ்.சி தமிழக மாணவர்களை மட்டும் வஞ்சிப்பதை ஏற்றுகொள்ள முடியாது, மேலும் அரசியல் கட்சிகளை போல் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்" என்று கருத்து பதிவிட்டுள்ளார் ரகுநாதன் என்ற நேயர்.

பாலாஜி என்ற நேயர், "ஆஃப்லைன் என்றிருந்தால் கூட மறுக்க வாய்ப்புண்டு. ஆன்லைன் விண்ணப்பங்கள் எப்படி மாணவர்கள் அறியாது மாற்றியிருக்க கூடும். எனினும் அது பொய் என சொல்லிவிட்டு பழியை சி.பி.எஸ்.சி மேல் போட முடியாது, சந்தேகம், உண்மையற்று இருந்தால் வழக்குக் கோரி விசாரிக்கலாம்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :