வாதம் விவாதம்: "மோதி அலை என்பது மாயை. சுனாமி என்பது சிறுபிள்ளைத்தனமான ஒன்று"

படத்தின் காப்புரிமை AFP

"பிரதமர் நரேந்திர மோதி அலை இப்போது சுனாமியாகிவிட்டது" - பா.ஜ.க தலைவர் அமித் ஷா. இந்தியா முழுவதும் பிரதமர் மோதியின் செல்வாக்கு உண்மையிலேயே அதிகரித்துள்ளதா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழின் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

"சுனாமி தான். ஆனால், சுனாமியால் விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் பாதிக்கப்படுகின்றனர். கார்பரேட்டுக்கு மட்டுமே இந்த சுனாமி அலை நன்மை பயக்கிறது" என்று சுரேஷ் என்ற நேயர் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"சுனாமிதான். அவருக்கான அலை இப்பொழுது ஜீரோ ஆகிவிட்டது. ஏன் என்றால் அவர் வாய்ப்பந்தல் ஜாலத்தை நம்ப மக்கள் தயாரில்லை. மோதி ஆதரவு சுனாமி அலை இப்பொழுது கடும் எதிர்ப்பு சுனாமி அலையாகிக் கொண்டு இருக்கின்றது" என்று பிரபாகரன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

"மோதி அலை என்பது மாயை. சுனாமி என்பது சிறுபிள்ளைத்தனமான ஒன்று" என்று சுப்ரமணியன் என்ற நேயர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுபாஷ் என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர், "மக்களின் வளத்தை, நிம்மதியை, பாதுகாப்பை சுருட்டிக் கொண்டு சென்ற சுனாமி" என்று பதிவிட்டுள்ளார்.

கிரி என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர், "கர்நாடக தேர்தல் நேர்மையாக நடந்தால் மோதியின் சர்வாதிகார சுனாமி அலைகள் உள்வாங்கும்" என்ற தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

"செல்வாக்கு என்பது அவர்களே கூறிக்கொள்வது. உண்மையில் மோதிக்கு எதிரான அலைகள்தான் ஓடிக்கொண்டுள்ளன" என்று ஷாகுல் என்பவர் பதிவிட்டுள்ளார்.

"அலை வீசுவது வட இந்தியர்களின் அறியாமையை காட்டுகிறது. அரசியல் விழிப்புணர்வு இல்லை" என்று அன்பரசு என்பவர் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :