மும்முனை போட்டியில் சூடுபிடிக்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மும்முனைப் போட்டியில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 12ம் தேதி கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்குமே மிகவும் முக்கியமானதாகும்.

2019ம் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுவதால், வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது.

பஞ்சாபில் மட்டுமே ஆட்சியிலுள்ள காங்கிரசிற்கு கர்நாடகத்தைத் தக்கவைத்துக் கொள்வது முக்கியமானது.

மதச்சார்பற்ற ஜனதா தளம், தான் இன்னமும் வலுவான சக்தி எனக் காட்ட விரும்புகிறது.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றையே கட்சிகள் முன்னிறுத்துகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: