தமிழுக்காக 72 வயது முதியவரின் 'திருக்குறள் நெசவு' முயற்சி

  • 12 மே 2018
படத்தின் காப்புரிமை Getty Images

கரூரில் உள்ள கைத்தறி நெசவாளர் சின்னசாமி திருக்குறளில் உள் 1330 குறள்களையும் கைத்தறி துணியில் செய்யும் முயற்சியில்ஈடுபட்டுள்ளார்.கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கைத்தறி நெசவாளர் சின்னசாமி.  72 வயதாகும் சின்னசாமி கைத்தறி கொழிலில் சுமார் 58  வயது அனுபவமுடையர்.  தற்போது புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு்ள்ளார்.   

திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் கைத்தறியில் வடிவமைக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு அதிகாரத்தில் உள்ள  10 குறட்பாக்களை  துணியில் நெய்து வருகிறார்.

முதலில் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் 10 குறள்களையும்,  பிறகு வான் சிறப்பு அதிகாரத்தில் உள்ள 10 குறள்களையும் நெய்துவிட்டு இப்போது 3வது அதிகாரத்தில் உள்ள குறள்களை நெய்து வருகிறார்.துணியில் நெய்யும் முன்பு கிராப் பேப்பரில் குறளை புள்ளி வடிவில் எழுதி வைத்துக்கொண்டு அதை வைத்து கைத்தறியில் நெய்து வருகிறார்.   1330 குறள்களையும் கைத்தறி நெய்து அரசிடம் ஒப்படைத்து அதை அரசே ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.திருக்குறள் மட்டுமல்லாது,  தமிழக அரசின் இலட்சிணை,  மகாத்மா,  காந்தி,  சுவாமி திருவுருவங்கள்  என கைத்தறியில் இவர் நெய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்