சுனந்தா புஷ்கர் வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது வழக்குப்பதிவு

2014ஆம் ஆண்டில் தனது மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.நாவுக்கான இந்தியாவின் முன்னாள் பிரதிநிதியுமான சசி தரூரின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Graham Crouch

சுனந்தா புஷ்கரின் மரணம், தற்கொலையாக இருக்கலாம் என தொடக்கத்தில் கருதப்பட்டாலும், பின்னர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலிஸ் தரப்பு கூறியது, ஆனால், சந்தேக நபர் என்று யாரையும் போலீஸ் குறிப்பிடவில்லை.

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக தற்போது சசி தரூர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கும் டெல்லி காவல்துறை, மனைவியை அவர் கொடுமைப்படுத்தியதாகவும் கூறுகிறது.

தனக்கு எதிரான "அபத்தமான குற்றச்சாட்டுக்களை" "தீவிரமாக" எதிர்க்கப் போவதாக சஷி தரூர் கூறினார்.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், துபாயைச் சேர்ந்த பெண் தொழில் அதிபரான சுனந்தா புஷ்கரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

2014 ஜனவரி 17ஆம் தேதி டெல்லியின் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சுனந்தா இறந்து கிடந்தார்.

சசி தரூர், பாகிஸ்தான ஊடகவியலாளர் மெகர் தஹ்ரார் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக, புதன்கிழமையிலிருந்து , சசி தரூரின் ட்விட்டர் கணக்கில் இருந்து தகவல்கள் பரவத்தொடங்கின.

இந்தத் தகவல்களை தான் பிரசுரித்ததாக சுனந்தா ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் அதை அவர் மறுத்தார்.

படத்தின் காப்புரிமை STRDEL

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்